[ சனிக்கிழமை,
31 ஓகஸ்ட் 2013,
10:40.29 AM GMT ]
யாழ்ப்பாணம்
ஏழாலைப் பிரதேசத்தில் 16 வயது
மாணவியொருவர் காணாமல்போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏழாலை மேற்கு
கோட்டைக்காட்டை சேர்ந்த நகுலேஸ்வரன் நளிர்வனா ( 16 வயது) என்ற மாணவியே கடந்த நான்கு நாட்களாக
காணாமல் போயுள்ளதாக, அவரது பெற்றோரால்
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவி
கடந்த செவ்வாய்க் கிழமை பாடசாலையில் மேலதிக வகுப்பிற்காக சென்றுள்ளார். ஆனால் அவர்,
இதுவரையில் வீடுதிரும்பவில்லை
என முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல்போன மாணவி
க.பொத சாதாரண தரத்தில் கல்வி கற்றுவருவதாகவும், மாணவியை அவரது தந்தையே சம்பவ தினத்தன்று
வகுப்பில் விட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம்
தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுன்னாகம் பொலிசார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment