[ சனிக்கிழமை,
31 ஓகஸ்ட் 2013,
02:08.22 AM GMT ]
தமிழீழ விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் சண்முகலிங்கம் சிவசங்கர் எனப்படும்
பொட்டு அம்மானின் சகோதரர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி
வெளியிட்டுள்ளது.
மாரடைப்பு
காரணமாக பொட்டு அம்மானின் மூத்த சகோதரர் சண்முகலிங்கம் சிவஞானகுமார் என்பவரே
இவ்வாறு யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்கு அருகாமையில் வைத்து மரணமடைந்துள்ளார்.
சைக்கிள் ஒன்றில்
பயணித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இவர்
உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில்
யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை நடத்தி நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
சிவஞானகுமார்
ஜெர்மனிய பிரஜாவுரிமை பெற்றுக் கொண்டவர் என்பது விசாரணைகளின் மூலம்
தெரியவந்துள்ளது.
கடந்த 21ம் திகதி சிவஞானகுமார் உயிரிழந்ததாகத்
தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின்
புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது
உயிரிழந்ததாக படைத் தரப்பினர் அறிவித்த போதிலும் அவரது சடலம் கிடைக்கப் பெறவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment