Sunday, 22 September 2013

குழந்தைகள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் மினி மிஸ்

               
பிரான்சில் நடைபெறும் மினி மிஸ் போட்டியானது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என்று அப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மைக்கல் லி பாரமென்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் குழந்தைகளுக்காக நடத்தப்பெறும் மினி மிஸ் போட்டியானது மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.

இந்நிலையில் இப்போட்டியானது குழந்தைகளை ஆபாச முறையில் காட்டுவதாக உள்ளது என்று செனட் அமைப்பு இதனை தடை செய்துள்ளது.

இது குறித்து மினி மிஸ் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மைக்கல் லி பாரமென்சர் கூறுகையில், இப்போட்டியானது குழந்தைகளை ஆபாசமாக காட்டும் நோக்கம் அல்ல மாறாக அவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதே ஆகும்.

இந்தப்போட்டியானது 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு இன்று வரை பிரச்சனையில்லாமல் நடைபெற்று கொணடிருந்தது.

இதற்கிடையில் அமெரிக்க நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் இந்த போட்டியில் பங்கேற்ற போது நீச்சல் உடை மற்றும் உயர் காலனியை அணிந்து பங்கேற்றார்.

ஆனால் நாங்கள் அச்சிறுமி பங்கேற்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை. இந்நிலையில் இணையதளம் ஒன்று இதனை பரப்பி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

இக்காரணத்தினாலயே இப்போட்டி தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டியில் வெற்றிபெறும் சிறுமிகள் வெறும் அழகினால் மட்டும் தெரிவுசெய்யப்படுவதில்லை மாறாக அவர்களது அறிவுத் திறனே இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே இப்போட்டியின் மூலம் சிறுமிகள் தங்களது எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அறிவுத்திறனை வளர்த்துக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.






            

No comments:

Post a Comment