Monday, 30 September 2013

சாலை விபத்தில் மாணவன் உயிரிழப்பு


பிரான்சில் சாலை விபத்தில் பிரிட்டனை சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்சில் உள்ள மான்ட்பில்லர் நெடுஞ்சாலையினை கடக்கும் போதே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று பிரான்ஸ் விடுதியில் தங்கியிருந்த பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 6 மாணவர்கள் மான்டர்பில்லர் நெடுஞ்சாலையினை கடக்க முயன்றுள்ளனர்.

அப்போது எதிரே வந்த மோட்டார் வாகனமானது இவர்கள் மீது மோதியதில் 22 வயது மாணவன் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், மீதியுள்ளவர்கள் படுகாயமடைந்தனர்.

உடனே விரைந்து வந்த பொலிசார் காயம்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்துடன், விபத்தை ஏற்படுத்திய 29 வயது நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் உயிரிழந்த மாணவன் குறித்து பிரிட்டிஷ் தூதரகத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment