Monday, 30 September 2013

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் - ஆளுநர் சந்திரசிறிக்கும் இடையில் சந்திப்பு.


வடக்கு மாகாணசபையின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் பெயர் பட்டியலை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் இன்று கையளித்துள்ளார்.

அதை தொடர்ந்து இருவரும் அமையவுள்ள மாகாணசபை மற்றும் அதனது காரியாலயம் பற்றி ஆராய்ந்திருந்ததாக கூறப்படுகின்றது.

வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வசிப்பிடத்திலேயே இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.

வட மாகாணசபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சீ.வி. விக்னேஸ்வரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனும் சென்றுள்ளார்..


மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பங்கள், அவர்களின் ஆதரவு குறித்து உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவே அவர் ஆளுநரை சந்திப்பதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment