கொழும்பு ஆங்கில
ஊடகம் ஒன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள
ஒரு அடுக்குமாடியில், சனல் 4 ஊடகவியலாளரும், அவரது மனைவியும் தங்கியுள்ளதாக புலனாய்வு
அமைப்புகள், தீவிரவாத
விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கொடுத்தனர்.
எனினும், அவர்கள் இலங்கையின் பெயரைக் கெடுக்கும்
நோக்கில் தகவல்களைத் திரட்டுவதற்காக வந்தனரா என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில்
பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
அத்துடன்,
அவர்கள் தங்கியிருந்த
அடுக்குமாடியின் முகாமையாளரிடம் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின்
போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தி வரும் சனல் 4 தொலைக்காட்சி, அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள
கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் புதிய சர்ச்சைகளை கிளப்பிவிடுமோ என்று இலங்கை
அரசாங்கம் அச்சத்தில் உள்ளது.
No comments:
Post a Comment