லினக்ஸ் மற்றும்
மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன.
மொபைல்
சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது.
இதனை நாம்
விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக
Ctrl +1 தொடங்கி, Ctrl +
8 வரை அழுத்தினால்
பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள இணைய தளங்களை அந்த எண் வரிசையில் இயக்கத்திற்குக்
கொண்டு வரலாம். இதன் செட்டிங்ஸ் மாற்ற (Alt +F / Alt+E) பயன்படுத்தலாம்.
Ctrl+D அப்போதைய இணைய
தளத்திற்கு புக்மார்க் அமைக்கிறது.
Ctrl+H குரோம் ஹிஸ்டரியைத்
தருகிறது.
Ctrl+J டவுண்லோட்ஸ்
பிரிவிற்குச் செல்கிறது.
Ctrl+K அட்ரஸ் பார்
வழியே, மிக வேகமான தேடலுக்கு வழி
தருகிறது.
Ctrl+N புதிய விண்டோ
திறக்கப்படுகிறது.
Ctrl+Sht+D அப்போது
திறக்கப்பட்டிருக்கும் அனைத்து டேப்களையும், ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கிறது.
Ctrl+Sht+T மூடப்பட்ட ஒரு
டேப்பினைத் திறக்கிறது.
நாம்
பயன்படுத்தும் எக்ஸ்டன்ஷன் அல்லது அப்ளிகேஷன்களுக்கு, நாமாகவும் ஷார்ட் கட் கீ தொகுப்பினை
அமைக்கலாம்.
Alt+F/Alt+E மூலம் குரோம்
மெனு சென்று Settings | Extensions பிரிவில்
இச்செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
chrome://bookmarks என டைப் செய்து
புக்மார்க்ஸ் பக்கத்திற்குச் செல்லலாம்.
chrome://setting என்பது
செட்டிங்ஸ் பக்கத்தினைத் திறந்து கொடுக்கும்.
இதே போல எக்ஸ்டன்ஷன்
பக்கம் திறக்க chrome://extensions என அட்ரஸ் பாரில்
அமைத்து என்டர் செய்திட வேண்டும்.
ஹிஸ்டரி பக்கம்
கிடைக்க chrome://history என அமைக்க
வேண்டும்.
No comments:
Post a Comment