Wednesday, 11 December 2013

வட மாகாண சபையின் முதலாவது வரவு-செலவுத்திட்டம் இன்று சபையில் சமர்பிக்கப்பட்டது.

நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் வட மாகாணத்திற்காக சொற்ப அளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாக இதன்போது உரையாற்றிய முதலமைச்சர் சி.வீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

இன்று காலை ஒன்பது மணிக்கு வட மாகாண சபை கூடியபோது முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் மாகாணத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்தார்.

அதன் பின்னர் முதலமைச்சர் மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்த கருத்து :-

நாட்டின் பட்ஜெட்டையும் எங்களுடையதையும் எடுத்துப் பார்த்தால் மிகவும் சொற்பமான ஒரு தொகை எமக்கு தரப்பட்டுள்ளது. தரப்பட்டுள்ள அந்தத் தொகையை வைத்தே நாம் எதையும் செய்யக்கூடியதாக இருக்கின்றது. விரைவாக வட கிழக்கில் இப்போதிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அவர்களின் கருத்துக்களை அறிய சர்வதேச பொறுமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். எமக்கு கிடைக்கப் போகும் நிதி உதவி மிகச் சொற்பமே. அங்கவீனர்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை நல்வாழ்வு பெற பிறநாட்டு உதவிகளுடன் கரைசேர்க்க எண்ணியுள்ளோம். இவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருக்காது என்று நம்புகின்றோம். சர்வதேச சமூகத்தையே நம்பவேண்டி இருக்கின்றது. அது தான் இப்போழுது காலத்தின் தேவையாக இருக்கின்றது போல் தெரிகின்றது.

அதன் பின்னர் மாகாண சபையின் 8 உறுப்பினர்களால் 13 பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

வட மாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும், ஜனாதிபதியின் நம்பிக்கையை வென்ற தமிழ் பிரதிநிதியொருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 13 பிரேணைகள் மாகாண சபையின் பிரதிநிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த 13 பிரேணைகளும் சபையில் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை, வட மாகாணத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும், வலிகாமம் வடக்கில் காணிகள் உரிய முறையில் பகிரப்பட வேண்டும் ஆகிய விடயங்களை வலியுறுத்தி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று மாகாண சபைக்குள் கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகளை வலியுத்தும் வகையில் அவர்கள் சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்

ஜெர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்பளித்துள்ளது.

 Photo: ஈழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையே இந்தியா, உதவியது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அல்ல – ஜெர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்பளித்துள்ளது.

ஜெர்மனியில் கடந்த மூன்று நாட்களாக நடைப்பெற்ற விசாரணையின் இறுதியில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

தீர்ப்பு:
1) சிங்கள அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது.

2) தமிழீழ இனப்படுகொலைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் சிங்கள அரசுக்கு துணைப்போயுள்ளன.

3) தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல.

கடந்த ஒரு வார காலமாக, ஜெர்மனியின் பெரிமனில் இந்த தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன.இலங்கை அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒன்றியம் (International Human Rights Association) மற்றும் இலங்கை சமாதானத்திற்கான ஐரிஸ் போரம் (Irish Forum for Peace in Sri Lanka) ஆகியன கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.
ஈழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையே இந்தியா, உதவியது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அல்ல ஜெர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்பளித்துள்ளது.
ஜெர்மனியில் கடந்த மூன்று நாட்களாக நடைப்பெற்ற விசாரணையின் இறுதியில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

தீர்ப்பு:
1) சிங்கள அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது.

2) தமிழீழ இனப்படுகொலைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் சிங்கள அரசுக்கு துணைப்போயுள்ளன.

3) தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல.

கடந்த ஒரு வார காலமாக, ஜெர்மனியின் பெரிமனில் இந்த தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன.இலங்கை அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒன்றியம் (International Human Rights Association) மற்றும் இலங்கை சமாதானத்திற்கான ஐரிஸ் போரம் (Irish Forum for Peace in Sri Lanka) ஆகியன கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.

2009ம் ஆண்டு ஈழத்தில் தமிழர்கள் எவ்வாறான மனநிலையில் இருந்தார்கள்,

ஜோ்மனியில் நடைபெறும் தீா்ப்பாயத்தில் காண்பிக்கப்பட்டவீடியோ மேற்குறித்த வீடியோ சம்பந்தப்பட்ட தரப்புக்களால் அனுப்பிவைக்கப்பட்டது (இழகிய மனம் உடையவா்கள் பாா்ப்பதை தவிக்கவும்)

2009ம் ஆண்டு ஈழத்தில் தமிழர்கள் எவ்வாறான மனநிலையில் இருந்தார்கள், அங்கே கொத்துக்கொத்தான எப்படி மக்கள் கொல்லப்பட்டார்கள் , அங்கிருந்த மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எவ்வாறு நடுங்கிக்கொண்டு ஓடினார்கள்,

எல்லாம் வீடியோவாக உள்ளது. அனைத்தையும் அவதானித்த இந்தியா என்ன செய்தது ? தற்போது சிதம்பரம் நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறாரே ஏன் ? குறிப்பிட்ட இந்த வீடியோவை நாம் , 540 இந்தியப் பாராளுமற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சாலாக அனுப்பியுள்ளோம்.

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா