Wednesday, 11 December 2013

வட மாகாண சபையின் முதலாவது வரவு-செலவுத்திட்டம் இன்று சபையில் சமர்பிக்கப்பட்டது.



நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் வட மாகாணத்திற்காக சொற்ப அளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாக இதன்போது உரையாற்றிய முதலமைச்சர் சி.வீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

இன்று காலை ஒன்பது மணிக்கு வட மாகாண சபை கூடியபோது முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் மாகாணத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்தார்.

அதன் பின்னர் முதலமைச்சர் மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்த கருத்து :-

நாட்டின் பட்ஜெட்டையும் எங்களுடையதையும் எடுத்துப் பார்த்தால் மிகவும் சொற்பமான ஒரு தொகை எமக்கு தரப்பட்டுள்ளது. தரப்பட்டுள்ள அந்தத் தொகையை வைத்தே நாம் எதையும் செய்யக்கூடியதாக இருக்கின்றது. விரைவாக வட கிழக்கில் இப்போதிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அவர்களின் கருத்துக்களை அறிய சர்வதேச பொறுமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். எமக்கு கிடைக்கப் போகும் நிதி உதவி மிகச் சொற்பமே. அங்கவீனர்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை நல்வாழ்வு பெற பிறநாட்டு உதவிகளுடன் கரைசேர்க்க எண்ணியுள்ளோம். இவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருக்காது என்று நம்புகின்றோம். சர்வதேச சமூகத்தையே நம்பவேண்டி இருக்கின்றது. அது தான் இப்போழுது காலத்தின் தேவையாக இருக்கின்றது போல் தெரிகின்றது.

அதன் பின்னர் மாகாண சபையின் 8 உறுப்பினர்களால் 13 பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

வட மாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும், ஜனாதிபதியின் நம்பிக்கையை வென்ற தமிழ் பிரதிநிதியொருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 13 பிரேணைகள் மாகாண சபையின் பிரதிநிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த 13 பிரேணைகளும் சபையில் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை, வட மாகாணத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும், வலிகாமம் வடக்கில் காணிகள் உரிய முறையில் பகிரப்பட வேண்டும் ஆகிய விடயங்களை வலியுறுத்தி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று மாகாண சபைக்குள் கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமது கோரிக்கைகளை வலியுத்தும் வகையில் அவர்கள் சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா