Tuesday, 22 April 2014

மோடிக்கு பரிசு கொடுக்க காத்திருக்கும் ரஜினி!


ரஜினிகாந்த் தனது கோச்சடையான் படத்தை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு சிறப்புக் காட்சியாக திரையிட்டு காட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு பிரசாரத்திற்கு வந்திருந்த நரேந்திர மோடி, ரஜினிகாந்த்தை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், ரஜினி நடிப்பில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில், தனது மகள் செளந்தர்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோச்சடையான் படம் மே 9ம் திகதி வெளியாகவுள்ளது.
ரஜினி, நரேந்திர மோடிக்கு இப்படத்தை தனியாக திரையிட்டு காட்ட முடிவு செய்திருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

குஜராத்தில் மோடியின் இடத்திலயே நடைபெற இருக்கும் இந்த திரையிடலில், இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment