Saturday, 31 August 2013

எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா' அனைத்துலக ஊடகங்களில் தலைப்புச் செய்தி! சிறிலங்காவுக்கு மற்றுமொரு கரும்புள்ளி!!


இலங்கைத்தீவுக்கான ஐ.நா ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது பயணம், சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலகின் மற்றுமொரு கவனத்தினை குவித்திருந்த நிலையில், எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா என ஐ.நா ஆணையாளர் குறித்துரைத்த கருத்து, அனைத்துலக ஊடகங்களின் இன்றைய மையச் செய்திகளில் ஒன்றாகிவிட்டது.
போருக்கு பிந்திய இலங்கைத்தீவின் சூழலில், சிறிலங்கா அரசாங்கத்தின் போக்கு அனைத்துலக மட்டத்தில் கடும் கடுமையான விமர்சனங்களை ஏலவே எதிர்கொண்டு வரும் நிலையில், அனைத்துலக ஊடகங்களில் மற்றுமொரு மையச்செய்தியாக (எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா) ஐ.நா ஆணையாளரின் கூற்று வெளிவந்திருப்பமை சிறிலங்காவுக்கு மற்றுமொரு கரும்புள்ளியாகவே கருதப்படுகின்றது.



போர்க்குற்ற விசாரண, ஆட்கடத்தல்கள், ஊடகத்துறையினர் மீதான தாக்குதல்கள் ,நில அபகரிப்பு, பாலியல் அச்சுறுத்தல்கள், காணமல் போனோர் விவகாரம், இராணுவ ஆக்கிரமிப்பு, மத வழிபாட்டு உரிமைகளுக்கான அச்சுறுத்தல்கள் என பல்வேறு விவகாரங்களில் சிறிலங்கா அரசினது போக்கும், அதன்வழி இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பேரினவாத பூதமும் சிங்களத்தின் மீதான கடும் விமர்சனங்களுக்கு காரணமாகியிருந்தன.

இந்நிலையில் இலங்கைத்தீவுக்கான ஐ.நா ஆணையாளரின் பயணம் சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலகின் கவனத்தினை பெற்றிருந்தது.

உங்களுடைய அறிக்கை கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றென மக்கள் கருதுகின்றனர் என ஐ.நா ஆணையாளருக்கு தெரிவித்திருந்த சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, அறிக்கையானது சுதந்திரமானதாக இருக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.

இத்தாலியில் 100 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: 36 பேர் பலி

இத்தாலியில் 100 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 36 பேர் பலியாகினர்.

தெற்கு இத்தாலியில் பட்ரே பியா என்ற இடத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலம் உள்ளது.

புக்லியா என்ற இடத்தில் இருந்து 50 பேர் பேருந்து ஒன்றில் சுற்றுலா புறப்பட்டு சென்றனர்.

நேபிள்ஸ் மலைப் பகுதியில் அவெல்லினோ என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 100 அடி ஆழ பள்ளத் தாக்கில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 36 பேர் பலியாகினர், 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததால் மலைப் பகுதியில் மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பல கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கின.

பிறந்த நாள் கொண்டாடியவர் முதலைக்கு இரையான பரிதாபம்


அவுஸ்திரேலியாவில் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர், முதலைக்கு இரையான சம்பவம் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின், டார்வின் நகருக்கு அருகே, மேரி நதிக் கரையோரத்தில் நேற்று முன்தினம் ஹோட்டல் ஒன்றில் 24 வயது நபர், பிறந்த நாளைக் கொண்டாடினார்.

நண்பர்களுடன், பிறந்த நாளைக் கொண்டாடிய அவர், மேரி நதியில் இறங்கி நீச்சலடித்தார்.

இந்த நதியில், முதலைகள் அதிகம் உள்ளதாகச் சிலர் எச்சரித்தனர். இருப்பினும் அந்த இளைஞர், நீச்சலடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ராட்சத முதலை ஒன்று, அந்த இளைஞரை தன் கோர பற்களால் பிடித்து இழுத்துச் சென்றது. நதிக் கரையோரம் இருந்தவர்கள் அலறினர். உடனடியாக மீட்புக் குழுவினரை அழைத்தனர். ஆனால், மீட்புக் குழு வருவதற்குள், அந்த முதலை ஆற்றின் அடியில் சென்று விட்டது.


முதலைகள் அதிகம் உள்ள நதி என்பதால், மற்றவர்களும் ஆற்றில் குதிக்கப் பயந்தனர். மீட்புக் குழுவினர் தேடியும், இதுவரை, அந்த இளைஞரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. முதலைக்கு அந்த இளைஞர் இரையானதாகக் கருதப்படுகிறது.

வட மாகாண சபையில் நாம் வெல்வது உறுதி! அதில் எந்த மாற்றமும் இல்லை: கிளிநொச்சியில் பா. உறுப்பினர் யோகேஸ்வரன்


வட மாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், கிளிநொச்சி மாவட்டத்தின் செல்வாநகர் கிராமத்தில் கரைச்சிப் பிரதேச உறுப்பினர் தம்பு சேதுபதியின் தலைமையில் நடாத்தப்பட்டது.
பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பித்த இப்பரப்புரைக் கூட்டம் இரவு இரவு 8 மணியளவில் நிறைவடைந்தது.


இப்பரப்புரைக் கூட்டத்தில் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிழக்கு மாகாணம் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நா.வை.குகராசா, உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

தமிழர்கள் நிலத்தில் சிங்களவர்கள் குடியேற்றத்திட்ட ஆவணத்தை வெளியிட்டது இலங்கை அரசு!


தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்கள குடியேற்றத்திற்கான திட்ட ஆவணத்தை இலங்கை அரசு வெளியிட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழர்கள் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்றும் மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மே பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலமாக தமிழரின் வாழ்வாதாரங்கள் அழிப்புக்குள்ளாக்கப்படுகிறது.

தனது பாரம்பரிய நிலத்தில் சிங்கள குடியேற்றங்கள் நிகழ்வதன் மூலமாக தமிழர்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது பாதுகாப்பின்மை காரணமாக வெளியேறுகிறார்கள்.

இதை தொடர்ச்சியாக சிங்கள் அரசே செய்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. ஆனால் தற்போது நேரடியாக சிங்கள் அரசின் உள்ளக திட்ட ஆவணம் வெளியானது என்பதன் ஊடாக இந்த உண்மை சந்தேகத்திக்கிடமின்றி நிரூபிக்கப்படுகிறது.

தமிழர்களின் விளை நிலங்கள், மீன்பிடி நிலங்கள், காடு சார்ந்த குடியிருப்புகள் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், காடுவளங்கள் என அனைத்திலும் சிங்கள குடியேற்றம் திட்டமிடப்பட்டு நிகழ்கிறது என்பதை இந்த ஆவணம் உறுதியாக்குகிறது.

கிட்டத்தட்ட 500 சிங்கள குடும்பங்களை தமிழர்களின் பூர்வீக நிலமான மன்னார் மாவட்டத்தில் குடியமர்த்த இருக்கும் இந்த திட்ட நகல், தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த நகலில் சிங்கள அரசின் மனித குலவிரோத நடவடிக்கைகள் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த குடியேற்றத்தினை சிங்கள இராணுவத்தின் தலைமை அதிகாரிகள் முன்னிலையில் அவர்களது ஒத்துழைப்போடு சிங்கள் அரசின் சிவில் நிர்வாகம் முன்னெடுக்கிறது. மேலும் இதில் அதிமுக்கியமாக சிங்கள அரசின் அதிபர் மாளிகை அதிகாரிகளும் பங்கேற்பதை ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது.

மேலும் இந்த குடியேற்றம் என்பது சிங்கள இராணுவத்தின் துணையோடு மிக விரைவாக துரிதமாக நடத்தப்படுவதை காண முடிகிறது.

இராணுவ அதிகாரிகள் சிவில் அதிகாரிகளோடு இணைந்து ஒருவார காலத்திற்குள் நிலத்தினை ஆக்கிரமிப்பது தொடர்பான திட்டத்தினையும், குடியமர்த்தப்படப் போகிற சிங்களவர்களை ஒருவார காலத்திற்குள் தேர்வுசெய்யப்பட வேண்டுமென்கிற கட்டளையும் இந்த ஆவணத்தில் பதிவாகி இருக்கிறது.

உள் நாட்டிற்குள் அகதியாக்கப்பட்ட தமிழர்கள் இன்றும் முறையாக குடியமர்த்தப்படவில்லை என்கிற உண்மை பல ஆதாரங்களுடன் வெளியாகிற தருணத்தில் இந்த குடியேற்றங்கள் என்பது தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான முயற்சியாகவும், தமிழீழ பகுதிகளை சிங்கள மயமாக்கி தமிழர்களை தேசிய மக்கள் என்கிற தகுதியில் இருந்து சிறுபான்மையாக்குவதையும் குறிக்கிறது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மன்னார் மாவட்டத்தில் சிங்களர்களை குடியேற்றும் நோக்கத்தில் அரசு பதவிகள் உட்பட இலவச நிலங்கள், பண உதவிகள் போன்ற உதவிகளை 500 சிங்கள குடும்பங்களுக்கு வழங்குகிறது.

ஜூலை 18, 2013 அரசு அதிகாரி எம்.வை.எஸ். தேசப்பிரிய மன்னார் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவர் சிங்கள இராணுவத்தில் பணியில் இருந்தவர்.

இதற்கு முன் இந்த பணியில் இருந்த ஜே.ஏ.சரத் ரவீந்திர என்பவர் சிங்கள குடியேற்ற்ங்களுக்கு ஒத்துழைக்காததால் வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

காணி அதிகாரம் மாவட்ட செயலாளரின் நேரிடையிலான அதிகாரத்திற்கு உட்பட்ட காரணத்தினால் எம்.வை.எஸ். தேசப்பிரியவின் நியமனம் முக்கியமாக கருதப்படுகிறது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் மற்றும் இராணுவ மற்றும் சுற்று சூழல் அமைச்சகம் பங்கு பெற்றிருக்கும் கமிட்டி விரைவாக செயல்படுத்த ராஜபக்ச அரசு முயலுகிறது.

மேலும் இந்தக் குடியேற்றத்தினை நேரடியாக ராஜபக்சவின் அதிபர் மாளிகை தனது கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுத்துகிறது என்பதை இந்த ஆவணத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள, நகல் அனுப்புவர் பட்டியலில் குறிப்பிடப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு சிங்கள குடியேற்றம் மிக விரைவாக நடக்கிறது. இப்போது அரசின் கவனம் மன்னார் மாவட்டம் பக்கம் திரும்பியுள்ளது.

நில உரிமை அதிகாரம் சிங்கள மக்களுக்கு அளித்ததை அரசு உறுதி செய்கிறது. இதுவரை 10 ஆயிரம் சிங்கள குடியேற்றமும், உள்கட்டுமான வளர்ச்சியும் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுள்ளது.

வவுனியாவிற்கு இடம்பெயர்வதற்கு 6 லட்சம் பணமும் நிலமும் சிங்களவர்களுக்கு வழங்கபடுகிறது. இது ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அம்மந்தோட்டா தொகுதி கிராம வாசிகளுக்கு வழங்கபட்டுள்ளது.

அதற்கு வவுனியாவில் பூர்வீக நிரந்தர வாசிகளாக மாறுவதற்கு ஒப்புதல் வாங்கபடுகிறது. மன்னாரில் சிங்களவர்களின் குடியேற்றம் வடக்கு மாகாண தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்ககூடாதென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழீழ படுகொலையில் மிக அதிக எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்ட பகுதியும் மன்னார் மாவட்டப் பகுதியில்தான் என்பதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் மறுவாழ்வு மையம் 2008 ஜூலை 22ம் தேதியில் மன்னாரில் 7650 தமிழ் குடும்பங்கள் கட்டாயமாக போரினால் வெளியேற்றப்பட்டனர் என்று ஆவணப்படுத்தியது. இவர்கள் மன்னாரில் இருந்து கிளிநொச்சிக்கு விரட்டப்பட்டனர்.

இந்த மக்கள் தொகையில் 7200 பேர் மாணவர்கள். மன்னாரில் வெளியேற்றப்பட்ட 7650 குடும்பங்கள் அல்லது கிட்டதட்ட 32000 தமிழர்களில் வெறும் 470 தமிழர்கள் மட்டுமே சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட முள்வேளி முகாமில் ஜூன் 15, 2009இல் ஆவணப்படுத்தப்பட்டனர்.

அப்படியென்றால் மிச்சமிருக்கும் 31,500 தமிழர்கள் என்ன ஆனார்கள் என்பதை இன்றுவரை உலகம் கண்டறிய முயலவில்லை. இத்தகைய படுகொலைகள் நிகழ்ந்த மன்னாரில் தற்போது தமிழர்கள் நிலங்களில் சிங்களவர்கள் குடியேற்றங்கள் நிகழ்வது ஆதாரப்பூர்வமாக வெளியாகிய பிறகு சர்வதேசமும், ஐ.நாவின் பாதுகாப்பு- பொதுச்சபையும் ஏன் இதுவரை சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது.

மேலும் தொடர்ச்சியாக இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவளிப்பதும் இலங்கை அரசு இனப்படுகொலையை மூடிமறைக்க முயலுவதையும் தமிழின விரோத போக்காகவே பார்க்கப்பட வேண்டி இருக்கிறது.

எல்லையோர மாநிலங்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான இனம், பண்பாட்டுத் தொடர்புகளை பேணுகின்ற மாநிலங்களின் கருத்துக்களை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இணைத்து பேசுகின்ற அல்லது உள்ளடக்குகின்ற ஜனநாயகத்தினை இந்தியா இழந்து ஒரு சர்வாதிகார மையமாக மாறிக்கொண்டிருக்கிறது.

இது இந்தியாவினால் வலியுறுத்தப்பட்ட குறைந்த பட்ச ஜனநாயகத்தினையும் மறுத்துக்கொண்டிருக்கிறது என்பதை இச்சமயத்தில் இந்திய அரசிற்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்.

இந்த நாடு ஒரு கூட்டாட்சியாக செயல்படும் பட்சத்தில் தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டுகொள்ளாமல் தவிர்க்கும் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே இலங்கை தொடர்ச்சியாக தமிழர்களை அழித்து வருகிறது என்பது உண்மை.

வெட்டவெளிச்சமாக வந்துள்ள இந்த ஆவணத்தினைக் கொண்டு இலங்கை அரசின் மீது சர்வதேச சுதந்திர விசாரணையை கொண்டுவர சர்வதேசமும், ஐ.நாவின் உயர் அதிகாரிகளும் முயலவேண்டும். 2009இல் போர் முடிந்த பொழுதிலேயே சர்வதேச விசாரணை வேண்டுமென்று ஐ.நா.வின் மனித உரிமைக் கமிஷன் மற்றும் ஐ.நா.வின் தலைமைச் செயலருக்கான சட்ட ஆலோசகர் குழு பரிந்துரைத்திருந்தும் இதுவரை அதை பான் கி மூன் உள்ளிட்ட அதிகாரிகளும் அவர்களுக்கு பின்னிருக்கும் மேற்குலகம், இந்திய அரசும் மறுத்து வருகிறது.

இது போன்ற அம்பலப்படுத்தப்பட்ட ஆவணங்கள், சனல் 4 இனால் வெளியிடப்பட்ட காணொளிகளைக் கொண்டு சர்வதேசம் உடனடியாக குற்றவாளிகளை தண்டிக்க சர்வதேச விசாரணையை கொண்டு வரவேண்டும், மேலும் பாதிக்கப்பட்டவர்களை காக்க தமிழீழ மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தனி நாட்டினை அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.


புலிகளின் ஓடுபாதையை பயன்படுத்திய முதல் வெளிநாட்டு பிரமுகர் நவநீதம்பிள்ளை


விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, சிறிலங்கா விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்ட அவர், நேற்றுமுன்தினம் மாலை இரணைமடு ஓடுபாதைக்கு சென்றார்.

அங்கிருந்து ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவுடன், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஏ.60 விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையைப் பயன்படுத்திய முதலாவது உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர் நவநீதம்பிள்ளையே என்பது குறிப்பிடத்தக்கது.


நவநீதம்பிள்ளையை திருமணம் செய்யத் தயார்! மேர்வின் சில்வாவின் வார்த்தை வெட்கித் தலைகுனிய வைக்கிறது!


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்த நவநீதம்பிள்ளை, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் வடுக்கள், காணாமல் போனோர் பற்றிய விபரங்கள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்களுடன் பேச்சு நடத்தவும், நடத்தியும் வருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா, நவநீதம்பிள்ளையை தான் திருமணம் செய்யத் தயார் என்று கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்வதற்கு தாம் தயார் என அமைச்சர் மேர்வின் சில்வா கூறியிருப்பதானது, இந்த நாட்டில் நிலவும் அசிங்கத்திற்கு ஓர் அடையாளமாகும்.

மேர்வின் சில்வாவின் குறித்த வார்த்தையையிட்டு இலங்கை மக்கள் நாணித் தலை குனியும் படியாகிவிட்டது.

அதுமட்டுமன்றி பெண்களை இழிவுபடுத்துகின்ற அளவில் ஓர் அமைச்சர் கதைத்திருப்பதானது இலங்கை ஆட்சியின் பண்பாடு எத்தன்மையில் உள்ளது என்பதற்கு நல்லதொரு சான்றாகும்.

பெண்கள் உயர் பதவி வகிப்பதையிட்டு மனித சமூகம் மகிழ்வடையவேண்டும்.

தாயாக, சகோதரியாகப் பார்க்கின்ற பண்பாடுகள் இருக்கும் போது, நவநீதம்பிள்ளையை திருமணம் செய்வதற்கு நான் தயார் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறுவாராக இருந்தால், அவரின் அமைச்சில் பணியாற்றுகின்ற பெண்கள், அவருக்கு வாக்களித்த பெண்கள் தொடர்பில் அவரின் மனநிலை எவ்வாறாக இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

நவநீதம்பிள்ளைக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக அமைச்சர் மேர்வின் கையாண்ட சொற்பதம் அமைச்சர் மேர்வினை அசிங்கப்படுத்திவிட்டது.

மக்களிடையே சமத்துவம்,நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்! மகிந்தவிடம் நவிபிள்ளை வலியுறுத்து


பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இருவருக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பௌதிக அபிவிருத்திகளுடன் சேர்த்து பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.

அத்துடன், சிறுபான்மையினத்தவர்களின் மதஸ்தலங்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை அவசியமெனவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவசியமான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடனான ஐ.நா. ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சந்திப்பை தொடர்ந்து அங்கு ஆராயப்பட்ட விடயங்களை ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப்பிரிவு வெளியிட்டது.

அதில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யுத்தத்தின் பின்னர் இலங்கை பெற்றுள்ள வெற்றிகள் குறித்து ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் வடக்கு மற்றும் கிழக்குக்கான தனது விஜயத்தின் போதே புனர்நிர்மாணம், மீள்கட்டுமானம், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தன்னால் அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்த நவிபிள்ளை!- தடுத்து நிறுத்திய இல. அரசு


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்த மேற்கொண்ட முயற்சியானது, அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டதாக தெரியவருகிறது.
இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற பிரதேசத்தில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உட்பட இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஆணையாளர் தீர்மானித்திருந்தாக கூறப்படுகிறது.

மனித உரிமை ஆணையாளரின் விஜயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சும் மற்றும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகம் என்பன இணைந்து தயார் செய்திருந்த நிகழ்ச்சி நிரலில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

ஒரு தந்தையின் பாசப் போராட்டம்

சிரியாவில் இரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருத்தப்பட்ட மகன் உயிருடன் திரும்பி வந்ததால் தந்தை அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில், கடந்த 21ம் திகதி இராணுவம் நடத்திய இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதில் தனது மகனும் பலியானதாக கருதிய தந்தை, மனமுடைந்து விட்டார்.

இந்நிலையில் தனது மகன் மீண்டும் உயிருடன் வந்தது அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தனது மகனை கட்டித் தழுவி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவியை கற்பழித்து ஆபாச படம் எடுத்த ஆசிரியர்


தமிழ்நாட்டில் பள்ளி மாணவியை கற்பழித்து அதனை ஆபாச படம் எடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேரணாம்பட்டு பாகர்உசேன் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சரண்ராஜ் (வயது 25). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி மீது இவருக்கு ஆசை ஏற்பட்டது.

மாணவியை அடிக்கடி சந்தித்து பேச தொடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியிடம் பேசி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து மாணவியை மிரட்டி கற்பழித்தார். மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை அவரது நண்பர்கள் விமல் (25), ரூபன் (24) ஆகியோர் கைப்பேசியில் படம் பிடித்துள்ளனர்.

நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கைப்பேசியில் உள்ள படத்தை ஊர் முழுவதும் பரப்பி விடுவோம் என மிரட்டி அனுப்பி விட்டனர்.

மேலும் அவ்வப்போது மாணவியை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். மாணவி வீட்டுக்கு தெரியாமல் நகைகளை விற்று பணம் கொடுத்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து பணம் சம்பாதிக்க விஜயகுமார் அமர்நாத் திட்டமிட்டு மாணவியின் சகோதரரிடம் கைப்பேசியின் படத்தை காட்டினர். ரூ.50 ஆயிரம் தராவிட்டால் படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

அப்போது தான் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அனைவரும் அவமானத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஆனால் கும்பல் பணம் கேட்டு மிரட்ட தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினர் பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜமுனாராணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பொலிஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சங்கர் பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


அதன்படி பள்ளி ஆசிரியர் சரண்ராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனில் பர்கருக்காக ஏங்கும் பிரியர்கள்


ஜேர்மனியில் துரித உணவுகள் குறித்து சோதனையிட்டதில் பர்கரை மக்களை விரும்பி சாப்பிடுவது தெரியவந்துள்ளது.

பர்கர் உணவனாது மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற துரித உணவாகும். ஜேர்மனில் உள்ள McDonald's இந்த விற்பனையில் முதல் இடம் பிடித்துள்ளது.

இதற்கு முன்னதாக இருந்த Kochlöffel பின்னுக்கு தள்ளப்பட்டு McDonald's பர்கர் கிங்காக வலம் வருகிறது.

மேலும் பர்கர் பிரியர் இது குறித்து கூறுகையில், பர்கர் துரித உணவானது திறந்த நெருப்பில் காட்டப்பட்டு தயாரிக்கப்படுகின்றது, மேலும் இரசாயனங்கள் கலப்பதால் உடல்நிலையில் சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடுகின்றன.


இதில் பல்வேறு சுவைகளான உப்பு, காரம் கலந்து இன்னும் சுவையாக தயாரிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு சிறைத்தண்டனை ரத்து


பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க சீல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒசாமாவின் இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்தது பாகிஸ்தானிய மருத்துவர் ஷகீல் அப்ரிடி தான் என குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையே லஷ்கர்- இ- இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பிற்கு மறைமுகமாக உதவி செய்த குற்றத்திற்காக அப்ரிடி கைது செய்யப்பட்டார்.

மேலும் ஒசாமா பதுங்கியிருந்த பகுதியில் சிஐஏ உதவியுடன் போலியாக சொட்டு மருந்து முகாம் நடத்தியதாகவும், அமெரிக்காவுக்கு உதவி செய்த குற்றத்திற்காகவும் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்போது, பெஷாவரில் உள்ள சிறையில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் இதனை எதிர்த்து சட்ட நிபுணர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மேல் முறையீடு செய்தனர்.

இந்நிலையில் கைபர் நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து ஷகில் அப்ரிடி மீதான வழக்கை, வேறு நீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும் என இந்த ஆணையத்தின் கமிஷனர் சாஹிப்சாதா முஹம்மது அனீஸ் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கை மறு விசாரணை செய்யவுள்ள புதிய நீதிபதியின் உத்தரவுப்படி தான் அவர் விடுதலை செய்யப்படுவார் என தெரிகிறது.

சமீபத்தில் பாகிஸ்தான் சென்றிருந்த அமெரிக்க அதிகாரிகள் அப்ரிடியை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

காலால் நடக்கும் அபூர்வ சுறா மீன்கள்


[ சனிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2013, 02:33.55 பி.ப GMT ]
கடல் வாழ் உயிரினமான மீன்கள் பொதுவாகவே நீந்தும் வல்லமை கொண்டவை.
இந்நிலையில் காலால் நடக்கும் அபூர்வ சுறா மீன்கள் இருப்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த அதிசய சுறா மீன்கள் இந்தோனேசியாவின் கிழக்கு கடலில் வாழ்கின்றன.

உடலுக்கு அடியில் இருக்கும் சிறிய கால்கள் மூலம் இவை கடலின் தரையில் நடந்து செல்கிறது.


இது அதிகபட்சம் 80 சென்டி மீட்டர்(அடி) நீளம் மட்டுமே வளரக்கூடியது, மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத சாதுவான பிராணி என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் கைது


[ சனிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2013, 01:44.26 PM GMT ]

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்த பெண்கள் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு ஒல்கோட் மாவத்தை, ரயில் நிலையம் அருகில் மற்றும் குணசிங்கபுர பகுதிகளில் இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கு: சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை


[ சனிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2013, 11:18.12 AM GMT +05:30 ]
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் டெல்லி சிறுவர் நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்துள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 6ம் திகதி ஒடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ராமன்சிங், முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் , இவர்களுடன் 16 வயது நிரம்பிய சிறுவன் ஒருவரும் அடங்குவார்.

இதற்கென விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 5 பேரில் ஒருவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

தற்போது மைனர் மீதான குற்றச்சாட்டானது தனியாக சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சிறுவனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையானது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என மாணவியின் தயார் கதறி அழுது வேதனை தெரிவித்துள்ளார்