Sunday, 29 September 2013

லண்டனில் திருட்டு கிரெடிட் அட்டையில் பண மோசடி செய்து நான்கு இலங்கையர்கள் கைது


லண்டனில் திருட்டு கிரெடிட் அட்டையில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை பிரஜைகள் நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் க்ளொஸ்டர்செயர் பிரதேசத்தில் தொடர்ச்சியான தன்னியக்க கருவியில் பண மோசடி செய்துள்ளனர்.

குரொய்டன் தென் பகுதியை சேர்ந்த 21 வயதான பஸீர் முஸ்தபா, 22 வயதான அசோக் பாலசுப்பிரமணியம், 50 வயதான தங்கவேல் வேலாயுதம் மற்றும் மிடில்செக்ஸ் பேனார்ட் காடன் பிரதேசத்தைச் சேர்ந்த குசலகுமார் சிதம்பரப்பிள்ளை ஆகிய நால்வருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பிரித்தானிய வங்கிகளில் வங்கி அட்டைகளின் மூலம் முறைகேடுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment