இப்பாத
யாத்திரையானது கடந்த வியாழக்கிழமை காலை 19ம் திகதி மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி 23ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் வெருகலம்பதி
சித்திரவேலாயுதர் ஆலயத்தில் நிறைவடைந்துள்ளது.
மாவடிவேம்பு,
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான், கும்புறுமூலை, கறுவாக்கேணி, வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, மயிலங்கரச்சை, மாங்கேணி, மாவடியோடை, பனிச்சங்கேணி, வாகரை, புளியங்கண்டலடி, கண்டலடி, அம்பந்தனாவெளி, பால்ச்சேனை, புச்சாக்கேணி, கதிரவெளி ஆகிய இடங்களில் பிரதான வீதி வழியாக
உள்ள ஆலயங்களுக்கு சென்று தரிசித்து வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை
சென்றடைந்தது.
இப்பாதயாத்திரை
ஒழுங்குகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மேற்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில்
பேரவையின் பிரதிநிதிகள் உட்பட இருநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment