Saturday, 28 September 2013

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆன்மீக எழுச்சி பாத யாத்திரை


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் வருடா வருடம் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி பாத யாத்திரை இடம்பெற்று வருகின்றது.
இப்பாத யாத்திரையானது கடந்த வியாழக்கிழமை காலை 19ம் திகதி மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி 23ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தில் நிறைவடைந்துள்ளது.
 
மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இப்பாதயாத்திரையானது, குறுமன்வெளி, எருவில், பட்டிருப்பு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, ஆரையம்பதி, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, கல்லடி, மட்டக்களப்பு, மாமாங்கம், ஊறணி, பிள்ளையாரடி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, மயிலம்பாவெளி, ஏறாவூர், செங்கலடி, கொம்மாதுறை, வந்தாறுமூலை,

மாவடிவேம்பு, சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான், கும்புறுமூலை, கறுவாக்கேணி, வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, மயிலங்கரச்சை, மாங்கேணி, மாவடியோடை, பனிச்சங்கேணி, வாகரை, புளியங்கண்டலடி, கண்டலடி, அம்பந்தனாவெளி, பால்ச்சேனை, புச்சாக்கேணி, கதிரவெளி ஆகிய இடங்களில் பிரதான வீதி வழியாக உள்ள ஆலயங்களுக்கு சென்று தரிசித்து வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடைந்தது.

இப்பாதயாத்திரை ஒழுங்குகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மேற்கொண்டிருந்தார்.


இந்நிகழ்வில் பேரவையின் பிரதிநிதிகள் உட்பட இருநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா