Monday, 30 September 2013

அதிரவைக்கும் உலக இருதய முகாம்


ஒரு வருடத்திற்கு 17.3 லட்சம் பேர் இதய நோயால் உயிரிழக்கின்றனர் என்ற அதிச்சி தகவலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் இதயவியல் துறை தலைவர் மருத்துவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள அறிவியல் மையத்தில் உலக இருதய தினத்தை முன்னிட்டு நெல்லை மருத்துவக் கல்லூரி இருதய நோய் சிகிச்சைப் பிரிவின் சார்பில் உலக இருதய தின முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் இ.சி.ஜி. போன்ற சோதனை கள் மருத்துவக் குழுவினரால் இலவசமாகவே நடத்தப்பட்டது.
 
பின்னர் சில மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய மருத்துவர் ரவிச்சந்திரன் எட்வின், ஆண்டு தோறும் டிசம்பர் 29ம் திகதியன்று உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆயினும் இந்த ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் இதய நாளாக உலக இருதயநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

குடும்பத்தின் முக்கியப்பங்கு வகிப்பவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

ஆனால் சமீபகாலமாக இளம் வயதுப் பெண்கள் இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக புள்ளி விபர ஆய்வுகளின் தகவல்கள் அதிரவைக்கின்றன.

நோயால் உயிரிழக்கும் மூன்று பெண்களில் ஒருவருக்கு இருதய பாதிப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக உலக அளவில் 17.3 லட்சம் பேர் இதய நோயால் உயிரிழக்கின்றனர்.

உடல் உழைப்பு குறைவு வேலையின்றி, நொறுக்குத்தீனிகள், கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பதால் பிரச்சினை ஏறபட்டு இதயம் பாதிக்கப்படுகிறது.

தினமும் அன்றாடம் வேலைகளை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு உறங்கச் சென்று அதிகாலை 5 மணிக்கு எழ வேண்டிய பழக்கம் வேண்டும்.

ஒரு வேளையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் துரித உணவுகளைத் தவிர்த்து விட்டு காய்கறி பழங்களை அதிக அளவு சேர்த்துக் கொள்வதோடு பழச்சாறு காய்கறி சூப் போன்றவைகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி பருகலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.


முகாமில் இருதய நோய் குறித்த சிறப்பு மருத்துவ கண்காட்சியும் நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா