தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(27). இவரது மனைவி புவனா(25). இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி
நிலையத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
மதுரை தியாகராஜர்
கல்லூரியில் பயிற்சி வகுப்புக்கு வரும் போது ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த
ராதாகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து
புவனாவின் படத்தை வாங்கினார். அதனை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில்
வெளியிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி
அடைந்த புவனா உடனடியாக மதுரை மத்திய குற்றப்பிரிவு பொலிசில் புகார் செய்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் பொலிசார் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment