Tuesday, 24 September 2013

பாடசாலை மாணவருக்குக் கத்திக்குத்து...


கனடாவின் ரொறன்ரோ நகரின் கிப்பிளிங் கொலிஜ்கேர் பாடசாலையில் பயிலும் மாணவன் ஒருவர் கத்திக் குத்திற்கு இலக்காகியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
கத்திக்குத்திற்கு இலக்காகிய 15 வயது மாணவன் தனது பாடசாலையின் வளவிற்குள் நின்றபோது கத்தியால் 3 தரம் குத்தப்பட்டிருக்கிறார் எனக் கூறப்படுகின்றது.

இவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன எனவும் இவரது உயிருக்கு ஆபத்தான நிலை இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார் எனத் தெரியவருகிறது.


குறிப்பிட்ட மாணவனைக் கத்தியால் குத்தியது தனிப்பட்ட நபர் அல்லவெனவும், அது ஒரு குழுவெனவும், இவரைக் குத்தியது ஆண் எனவும் தெரியவருகின்றது. இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லையெனத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா