எனினும் நேற்று
அரசியல் ரீதியான சந்திப்புகள் நடைபெற்றதால் ஈருருளிப் பயணம் பெரியளவில்
நடைபெறவில்லை. அத்தோடு இன்றும் அரசியல் சந்திப்புக்கள் நடைபெறவுள்ளதால் இவர்களது
பயணம் நடைபெறமாட்டாது. மேலும் இவர்கள் புரூசலை சென்றடைய இன்னும் 180 கிலோமீற்றர்களே உள்ளது.
ஐரோப்பியன்
ஒன்றியமானது மனித உரிமைகளுக்கும, ஜனநாயகத்திற்கும்
முன்னுரிமை அளிக்கும். அந்தவகையில் தமிழ்மக்களின் அவலத்தைப் போக்கி, நிரந்தரமான நிம்மதியான வாழ்விற்கு பாடுபடும் என
அவர் உறுதியளித்தார்.
எதிர்வரும் 30.09.2013 நடைபெறவுள்ள பேரணியில் அனைத்துலகத்திடம் நீதி
கேட்க அனைத்து தமிழ்மக்களும் எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க அணிதிரளுமாறு
மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் அழைப்புவிடுகிறார்கள்.
ஈருருளிப் பயணம்
இறுதி நாளான 30.09.2013 அன்று பெல்ஜியம்
தலைநகர் புரூசல்சிலில் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வும் நடைபெறும்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment