Monday, 30 September 2013

புத்தளத்தில் மீண்டும் தேர்தலை நடாத்துமாறு மனுத் தாக்கல்


புத்தளத்தில் மீண்டும் தேர்தலை நடாத்துமாறு கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட தேர்தல் முடிவுகளை ரத்து செய்து, மீளத் தேர்தலை நடாத்துமாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனசெத்த என்ற அமைப்பினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனசெத்தவின் பொதுச் செயலாளர் பத்தரமுல்ல சீலரட்ன தேரர் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தேர்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் வரையில் கடந்த 21ம் திகதி வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா