அத்துடன்,
மேற்படி நபர்களின் வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் சான்றிதழை கிராம அலுவலரிடம் பெற்று
தம்மிடம் சமர்ப்பிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார். மேற்படி
சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கொண்ட
இளைஞர் குழுவையும், குறித்த வாகனத்தின் சாரதியினையும்
கடத்தப்பட்ட பெண்ணையும், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இந்த
உத்தரவினைப் பிறப்பித்தார் என வன்னி மீடியா
இணையம் மேலும் அறிகிறது.
Wednesday, 23 April 2014
மண்டைதீவிலிருந்து பெண்ணை யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட 5பேர் கைது
தேவியன் பயன்படுத்திய வேன் புலனாய்வுப் பிரிவினரால் மீட்புபணத்தை வெளிநாட்டில் உள்ள தமிழர்களே கொடுத்தார்களாம்..
சமீபத்தில்
விடுதலைப் புலிகள் இணைந்து ஒன்றுசேர்கிறார்கள்
என்ற கதையை அரங்கேற்றி, பின்னர்
கோபி, தெய்வீகன், மற்றும் அப்பன் ஆகியோர்
நெடுங்கேணியில் வைத்து இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
அதன் பின்னர் அவர்கள் பாவித்த
மோபைல் தொலைபேசியில் உள்ள இலக்கங்களை தாம்
கண்டுபிடித்துள்ளதாக கூறி சுமார் 40 தமிழர்களை
இலங்கை இராணுவம் கைதுசெய்துள்ளது. இதேவேளை நல்லூரில் தெய்வீகன்
மற்றும் கோபி பாவித்ததாக கூறப்படும்
வெள்ளை நிற வான் ஒன்றை
தாம் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை பயங்கரவாத தடுப்பு
பிரிவினர் தெரிவித்துள்ளார்கள்.
விடுதலைப்
புலிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைக்கே இந்த வாகனம் பாவிக்கப்பட்டது
என்று இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. குறித்த
இந்த வாகனம் சுமார் 2 வருடங்களுக்கு
முன்னர் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர்,
இதனை வாங்க பணத்தை வெளிநாட்டில்
உள்ள தமிழர்களே வழங்கியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனூடாக இனி
இந்தப் பணத்தை யார் அனுப்பியது
என்ற பொய்யான பட்டியல் ஒன்றை,
இலங்கை இராணுவம் வெளியிட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மறைவான இடத்தில் இருந்த வானை தாம்
கண்டுபிடித்துள்ளதாக கூறும் இராணுவத்தினர் அதன்
புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
யாழ்.கோட்டைக்குள் நுளைந்த பாகிஸ்தானின் இராணுவக் குழு
..
கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்த பாகிஸ்தானின்
இராணுவ குழு இன்று புதன்கிழமை
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. குறித்த
குழுவினரை இலங்கை இராணுவத்தினர் அழைத்துச்
சென்று யாழ்.கோட்டைப் பகுதியை
காண்பித்தனர்.
பாகிஸ்தானின்
தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினரே இந்தப்
பயணத்தில் இடம்பெற்றிருந்தனர். தாம் பல்வேறு நாடுகளுக்கும்
இவ்வாறான பயணங்களில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தக்
குழுவினர் யாழ்.கோட்டைப் பகுதியை
பார்வையிட்டதன் பின்னர் யாழ். துரையப்பா
மைதானத்திலிருந்து உலங்கு வானூர்தியில் புறப்பட்டுச்
சென்றனர்.

பாரிய சத்தத்துடன் வானிலிருந்து விழுந்த ‘ஆமை’யால் பரபரப்பு
ஆரோக்கியம் வேண்டுமா? இந்த பழத்தை சாப்பிடுங்கள்
ஆரோக்கியமான
வாழ்வை விரும்புவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவுகளையும் உண்ண வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சிகளை
செய்வது என்று சில ஆரோக்கியமான
விடயங்களை கடைபிடிக்க வேண்டும்.
குறிப்பாக
கோடையில் உடலை குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும்
வைத்துக் கொள்ள காய்கறிகள் மற்றும்
பழங்களை அதிகம் வாங்கி வந்து
சாப்பிடுவார்கள்.
ஏனென்றால்
கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க
நீர்ச்சத்தானது அதிக அளவில் தேவைப்படும்.
மேலும் புரோட்டீன், வைட்டமின் போன்றவைகளும் அதிகம் தேவைப்படுவதால், அத்தகைய
சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை அன்றாடம்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகளை
சாப்பிட முடியாவிட்டாலும், கோடையில் அத்தகைய சத்துக்கள் நிறைந்த
பழங்களையாவது சாப்பிட வேண்டும்.
இதோ ஆரோக்கியத்துடன், குளிர்ச்சி தரும் பழங்கள் உங்களுக்காக,
வாழைப்பழம்
வாழைப்பழம்
எப்போதுமே எனர்ஜியை அதிகம் உள்ளடக்கிய பழங்களில்
ஒன்று. எனவே இத்தகைய வாழைப்பழத்தை
தினமும் இரண்டு சாப்பிட்டு வருவது
மிகவும் நல்லது
தர்பூசணி
தர்பூசணியில்
லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்
அதிக அளவில் உள்ளது. இவை
இதய நோய் வராமல் தடுக்கும்
சக்தி கொண்டவை. எனவே இதனையும் கோடையில்
தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
ஆரஞ்சு
நீரிழிவு
நோய் இருந்தால், ஆரஞ்சு பழத்தை தினமும்
சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவை
சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, போதிய
இன்சுலினை சுரக்கச் செய்யும்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியை
ஜூஸாகவோ அல்லது அப்படியே சாப்பிட்டால்,
அதில் உள்ள வைட்டமின்கள் வயிற்றில்
ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும்.
கொய்யாப்பழம்
இவை உடலில் உள்ள யூரிக்
ஆசிட்டின் அளவை சிறுநீரின் வழியே
வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ள உதவியாக இருக்கும்.
திராட்சை
தைராய்டு
உள்ளவர்கள், தினமும் திராட்சையை சாப்பிடுவது
நல்லது. ஏனெனில் இவை தைராய்டு
சுரப்பியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
செர்ரி
செர்ரியை
தினமும் சாப்பிட்டு வந்தால், அவை ஆர்த்ரிடிஸ் பிரச்சனை
வராமல் தடுக்கும்.
12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன்......
இச்சிறுவன்
17 வயது முதல் 48 வயது வரை உள்ள
12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளான்
இதுகுறித்து
பொலிஸ் உயரதிகாரி கூறுகையில், கடந்த ஒரு வருடத்தில்
மட்டும் 12 பெண்களிடம் இவன் தவறாக நடக்க
முயற்சித்துள்ளான்.
கடைசியாக
கடந்த அக்டோபர் மாதம் 48 வயது பெண்மணி ஒருவரிடம்
தவறாக நடக்க முயற்சித்த போது
மாட்டிக்கொண்டான் என்றும் இவனைக் குறித்து
புகாரை வெளிப்படையாக அறிவித்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
எனவும் கூறியுள்ளார்.
இச்சிறுவன்
16 வயதுக்குட்பட்டிருப்பதால்
சிறப்பு நீதிமன்றம் அவனுக்கு 12 மாதம் சிறார் சிறையில்
தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து
சிறுவன் கூறுகையில்,நான் தெரியாமல் இத்தவறுகளை
செய்துவிட்டேன் என்றும் இதற்காக வருத்தம்
தெரிவிக்கிறேன் எனவும் கூறியுள்ளான்.
Tuesday, 22 April 2014
கிராமத்திற்குள் நுழைந்த புலி: உயிரைக் காப்பாற்ற தலைதெறிக்க ஓடும் மக்கள் புலி ஒன்று இந்தியாவின் சந்ரபூர் கிராம மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் மஹராஸ்ட்ரா மாநிலத்தில் உள்ளது சந்ரபூர் கிராமம், கிராமத்திற்குள் நுழைந்த புலி ஒன்று மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதையும், கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதையும் கிராமவாசி ஒருவர் ஔிப்பதிவு செய்துள்ளார். வீடொன்றிக்குள் நுழைந்த புலி கூரை ஊடாக மேலே வருவதும் பின்னர் அங்கிருந்த மனிதர்களை தாக்குவதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது
இலங்கைப் பெண்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக வேலை வாய்ப்பாம்.
ஐரோப்பிய
நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகம்
காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலை
வாய்ப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
25 - 45 வயதிற்கும்
இடைப்பட்ட பெண்களுக்கே இந்த வேலை வாய்ப்பு
காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலதிக தகவல் அறிய,
0773 148 927 , 0773 983 536 மற்றும்
0775 489 506 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்துமாறு அவர்
கேட்டுக் கொண்டுள்ளார்.
மூன்று
வாரகால பயிற்சியின் பின் மொழி தேர்ச்சிப்
பயிற்சியில் சித்திபெறும் பெண்களை எவ்வித கட்டணமும்
இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு பணிப் பெண்களாக அனுப்பி
வைக்க எதிர்பார்த்துள்ளதாக மங்கல ரந்தெனிய தெரிவித்தார்.
மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி விவகாரம் முடிவுக்கு வருகிறது.
கோலாலம்பூரில்
இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம்,
கடந்த மாதம் 8-ந்தேதி மாயமானது.
இந்த விமானம் இந்திய பெருங்கடலின்
தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின்
கப்பல்கள் அந்த பகுதியில் சல்லடை
போட்டு தேடி வருகின்றன. இதைப்போல
மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடி
மீட்கும் பணியிலும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த ரோபோ 7 முறை நீருக்குள்
சென்று தகவல்களை சேகரித்து வந்த பிறகும் விமானம்
குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை
குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் மீட்புக்குழுவினர் விரக்தியடைந்துள்ளனர். எனவே கறுப்பு பெட்டியை
தேடும் பணியை 5 அல்லது 6 நாட்களுக்குள்
முடிக்க திட்டமிட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக இந்த பணியை பல்வேறு
மாதங்களுக்கு நீட்டிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு பரிசு கொடுக்க காத்திருக்கும் ரஜினி!
சென்னைக்கு
பிரசாரத்திற்கு வந்திருந்த நரேந்திர மோடி, ரஜினிகாந்த்தை மரியாதை
நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து
பேசினார்.
இந்நிலையில்,
ரஜினி நடிப்பில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில்,
தனது மகள் செளந்தர்யா இயக்கத்தில்
உருவாகியிருக்கும் கோச்சடையான் படம் மே 9ம்
திகதி வெளியாகவுள்ளது.
ரஜினி,
நரேந்திர மோடிக்கு இப்படத்தை தனியாக திரையிட்டு காட்ட
முடிவு செய்திருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
குஜராத்தில்
மோடியின் இடத்திலயே நடைபெற இருக்கும் இந்த
திரையிடலில், இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் மட்டும் கலந்து கொள்ள
இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீள்குடியேற்றம் பற்றி மூடிமறைத்து தகவல்கள் வெளியிட்ட கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
இந்த கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின்
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன்
மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சந்திரகுமார், அலன்டீலன், வடமாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின் தவிசாளர்
நாவை.குகராஜா, சபையின் உறுப்பினர்கள் பூநகரி
மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட
அரசாங்க அதிபர், மாவட்ட அரச
திணைக்களங்களின் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசசார்பற்ற
நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என மாவட்ட அபிவிருத்தி
வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் கலந்துகொண்டனர்.
பிரித்தானிப் பெண் மிக விரைவில் நாடு கடத்தப்படலாம்
பிரித்தானிய
ஊடகமொன்று இது தொடர்பாக செய்தி
வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து
இலங்கைக்கு வந்த நவோமி மைக்கேல்
கோல்மன் (37 வயது) என்ற பிரித்தானிய
சுற்றுலாப் பயணி கட்டுநாயக்க விமான
நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது இலங்கையில் உள்ள
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தடுப்பு மையத்தில்
தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த
பிரித்தானியப் பெண்ணின் வழக்கினை கையாள்வதாக பிரிட்டிஷ் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவலகப்
பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிடுகையில்,
குறித்த
பிரித்தானியப் பெண் வலது கையில்
தாமரை மலர் மீது அமர்ந்துள்ள
புத்தரின் படத்தினைப் பச்சை குத்தியது ஏனைய
மதத்தினை புண் படுத்துவதாக உள்ளது.
இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு,
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிமன்றம்
அவரை நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. தற்போது நாடுகடத்தப்படும் வரை அவர் குடிவரவு
தடுப்புக்காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாளை
அல்லது நாளை மறுநாள் நாடுகடத்தப்படலாம்
என தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
கடந்த வருடமும் புத்தரின் படத்தினை பச்சை குத்தியிருந்த வெளிநாட்டுப்
பிரஜையொருவர் நாடுகடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Saturday, 19 April 2014
மட்டக்களப்பின் வரலாற்று சின்னமாக கருதப்படும் மண்முனைப் பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்புz
மட்டக்களப்பு
மாவட்டத்தின் எழுவான்கரையினையும் படுவான்கரையினையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று
திறந்து வைத்துள்ளார்.
மட்டக்களப்பு
வாவி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து நிற்பதால் வாவியின் கிழக்குப் பகுதி எழுவான்கரை என்றும்
மேற்குப் பகுதி படுவான்கரை எனவும்
பெயர் பெறலாயிற்று.
இந்தப்
படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான தொடர்பு மட்டக்களப்பு மண்முனை
வாவி ஊடாகவே நடைபெற்று வந்தது.
இதற்காக பாதை எனப்படும் பெரிய
இயந்திரப்படகு இப்போது வரை பாவிக்கப்பட்டு
வருகிறது.
இதற்கு
முற்றுப் புள்ளி வைக்கவும், மக்கள்
எதிர் கொண்டு வரும் பெருமளவான
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மண்முனைப் பாலம் இன்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்சவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்,
ஜப்பானியத் தூதுவர் நொபகிடோ ஹோபோ
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்
ஏ.மஜித், சிறுவர்
மற்றும் மகளிர் விவகாரப் பிரதி
அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீள்குடியேற்ற
பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண
முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரும் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும்
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து
.கொண்டிருந்தனர்
Subscribe to:
Comments (Atom)