மட்டக்களப்பு
மாவட்டத்தின் எழுவான்கரையினையும் படுவான்கரையினையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று
திறந்து வைத்துள்ளார்.
மட்டக்களப்பு
வாவி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து நிற்பதால் வாவியின் கிழக்குப் பகுதி எழுவான்கரை என்றும்
மேற்குப் பகுதி படுவான்கரை எனவும்
பெயர் பெறலாயிற்று.
இந்தப்
படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான தொடர்பு மட்டக்களப்பு மண்முனை
வாவி ஊடாகவே நடைபெற்று வந்தது.
இதற்காக பாதை எனப்படும் பெரிய
இயந்திரப்படகு இப்போது வரை பாவிக்கப்பட்டு
வருகிறது.
இதற்கு
முற்றுப் புள்ளி வைக்கவும், மக்கள்
எதிர் கொண்டு வரும் பெருமளவான
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மண்முனைப் பாலம் இன்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்சவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்,
ஜப்பானியத் தூதுவர் நொபகிடோ ஹோபோ
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்
ஏ.மஜித், சிறுவர்
மற்றும் மகளிர் விவகாரப் பிரதி
அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீள்குடியேற்ற
பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண
முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரும் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும்
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து
.கொண்டிருந்தனர்
இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் படுவான்கரையில் உள்ள
பல கிராமங்கள் நன்மை அடைய உள்ளன.
2010ஆம்
ஆண்டு தேசிய நல்லிணக்க அமைச்சராக
விநாயகமூர்த்தி முரளிதரன் பொறுப்பேற்றதை தொடர்ந்து ஜப்பான் தூதுவரை சந்தித்து
மண்முனைத்துறை பாலம் அமைப்பதற்கு உதவுமாறு
கோரியிருந்தார்.
மட்டக்களப்பு
மாவட்டத்தின் படுவான்கரையையும், எழுவான்கரையையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான
மண்முனை ஆற்றுக்கு மேலாக இப்பாலம் அமைப்பது
தொடர்பான ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு ஜுலை
மாதம் வீதி அபிவிருத்தி அதிகார
சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தற்போது
அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2012 செப்ரம்பர் 04ஆம் திகதி பட்டிப்பளை
அபிவிருத்திக்குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
பாலத்தின்
நிர்மாண பணிகள் 33 மாதங்களில் நிறைவடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்ரோபர்
மாதம் 16ஆம் திகதி வேலைத்திட்ட
அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று மண்முனைப்
பாலம் 210 மீற்றர் ஆகவும், இரு
பக்கங்களிலும் 500 மீற்றர் அளவான மதகாகவும்
(கோஸ்வே) மொத்தமாக 1210 மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளது.
மண்முனைத்துறை
பாலத்துக்கான வேலைத்திட்ட அங்குரார்ப்பணம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அமைச்சர் பஷில் ராஜபக்சவினால் ஜப்பானியத்
தூதுவர் நொபுகிரோ றோபோ கிழக்கு மாகாண
முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித்,
சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப்
பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற
பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் கிழக்கு மாகாண
முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment