Saturday, 28 September 2013

ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இரவு 7.45மணியளவில் ஆரையம்பதி,ஐந்தாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் ஆயித்தியமலை பிரதான வீதியை சேர்ந்த இராஜேந்திரன் (32வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஆயித்தியமலையில் இருந்து களுவாஞ்சிகுடி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மண் ஏற்றி வந்த கென்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் நேராக மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த அவர் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை விபத்தினை தொடர்ந்து விபத்தினை ஏற்படுத்திய வாகனம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டது.


இதன்போது காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளினால் பதற்ற நிலை தணிந்தது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா