சமாதான
நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட ஒன்று கூடல் ஞாயிற்றுக்கிழமை
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில்
கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கணவனால்
கைவிடப்பட்ட பெண்களின் முழுமையான எண்ணிக்கை இன்னும் அறிக்கையிடப்படவில்லை. ஏனெனில்
சிலர் திருமணம் செய்ததை இவர்கள் பதிவு செய்யாததால் இந்த விபரம் இன்னும் முழுமையாக
தெரிய வரவில்லை.
இதேபோன்று
மட்டக்களப்பு மாவட்டம் அதிகம் மதுபானம் விற்பனை செய்யக் கூடிய மாவட்டமாகவும்
உள்ளது.
பெண்களுக்கெதிரான
வன்முறை, குடும்ப வன்முறை,
சிறுவர் துஷ்பிரயோகம்,
பாடசாலை செல்லாத
சிறுவர்கள் என சமூகச் சீரழிவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம்
காணப்படுகின்றன.
இவ்வாறான சமூகச்
சீரழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களின்
ஊடாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இது தொடர்பாக
மாதாந்தம் பிரதேச செயலாளர்களுடன் கூட்டங்களை நடாத்தி இதை கட்டுப்படுத்துவதற்காக
பிரதேச மட்டத்திலுள்ள எமது உத்தியோகத்தர்களை கொண்டு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு
வருகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment