சட்டவிரோதமாக
துப்பாக்கி ஒன்றையும் தோட்டக்களையும் வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் மொனராகலை
பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர் கைது
செய்யப்பட்டார்.
குறித்த இராணுவ
வீரர் மட்டக்களப்பு பிரதேசத்திற்கு தப்பிச் செல்லும் நோக்கில் பஸ் நிலையத்திற்கு
சென்றிருந்த போது பிரதேசவாசிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
இந்த நபர்
கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றி வருபவர் என
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment