தமிழர்களின்
பாரம்பரிய நிலத்தில் சிங்கள குடியேற்றத்திற்கான திட்ட ஆவணத்தை இலங்கை அரசு
வெளியிட்டுள்ளதாகவும், இதன் மூலம்
தமிழர்கள் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்றும் மே பதினேழு இயக்கம்
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மே
பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழர்கள்
பாரம்பரியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள்
தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலமாக தமிழரின் வாழ்வாதாரங்கள்
அழிப்புக்குள்ளாக்கப்படுகிறது.
தனது பாரம்பரிய
நிலத்தில் சிங்கள குடியேற்றங்கள் நிகழ்வதன் மூலமாக தமிழர்கள் நிலங்களில் இருந்து
வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது பாதுகாப்பின்மை காரணமாக வெளியேறுகிறார்கள்.
இதை தொடர்ச்சியாக
சிங்கள் அரசே செய்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. ஆனால்
தற்போது நேரடியாக சிங்கள் அரசின் உள்ளக திட்ட ஆவணம் வெளியானது என்பதன் ஊடாக இந்த
உண்மை சந்தேகத்திக்கிடமின்றி நிரூபிக்கப்படுகிறது.
தமிழர்களின் விளை
நிலங்கள், மீன்பிடி
நிலங்கள், காடு சார்ந்த
குடியிருப்புகள் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், காடுவளங்கள் என அனைத்திலும் சிங்கள குடியேற்றம்
திட்டமிடப்பட்டு நிகழ்கிறது என்பதை இந்த ஆவணம் உறுதியாக்குகிறது.
கிட்டத்தட்ட 500 சிங்கள குடும்பங்களை தமிழர்களின் பூர்வீக
நிலமான மன்னார் மாவட்டத்தில் குடியமர்த்த இருக்கும் இந்த திட்ட நகல், தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த
நகலில் சிங்கள அரசின் மனித குலவிரோத நடவடிக்கைகள் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த
குடியேற்றத்தினை சிங்கள இராணுவத்தின் தலைமை அதிகாரிகள் முன்னிலையில் அவர்களது
ஒத்துழைப்போடு சிங்கள் அரசின் சிவில் நிர்வாகம் முன்னெடுக்கிறது. மேலும் இதில்
அதிமுக்கியமாக சிங்கள அரசின் அதிபர் மாளிகை அதிகாரிகளும் பங்கேற்பதை ஆதாரப்பூர்வமாக
விளக்குகிறது.
மேலும் இந்த
குடியேற்றம் என்பது சிங்கள இராணுவத்தின் துணையோடு மிக விரைவாக துரிதமாக
நடத்தப்படுவதை காண முடிகிறது.
இராணுவ
அதிகாரிகள் சிவில் அதிகாரிகளோடு இணைந்து ஒருவார காலத்திற்குள் நிலத்தினை
ஆக்கிரமிப்பது தொடர்பான திட்டத்தினையும், குடியமர்த்தப்படப் போகிற சிங்களவர்களை ஒருவார காலத்திற்குள் தேர்வுசெய்யப்பட
வேண்டுமென்கிற கட்டளையும் இந்த ஆவணத்தில் பதிவாகி இருக்கிறது.
உள் நாட்டிற்குள்
அகதியாக்கப்பட்ட தமிழர்கள் இன்றும் முறையாக குடியமர்த்தப்படவில்லை என்கிற உண்மை பல
ஆதாரங்களுடன் வெளியாகிற தருணத்தில் இந்த குடியேற்றங்கள் என்பது தமிழர்களை
ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான முயற்சியாகவும், தமிழீழ பகுதிகளை சிங்கள மயமாக்கி தமிழர்களை
தேசிய மக்கள் என்கிற தகுதியில் இருந்து சிறுபான்மையாக்குவதையும் குறிக்கிறது.
தமிழர்கள்
பெரும்பான்மையாக வாழும் மன்னார் மாவட்டத்தில் சிங்களர்களை குடியேற்றும்
நோக்கத்தில் அரசு பதவிகள் உட்பட இலவச நிலங்கள், பண உதவிகள் போன்ற உதவிகளை 500 சிங்கள குடும்பங்களுக்கு வழங்குகிறது.
ஜூலை 18,
2013 அரசு அதிகாரி
எம்.வை.எஸ். தேசப்பிரிய மன்னார் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவர்
சிங்கள இராணுவத்தில் பணியில் இருந்தவர்.
இதற்கு முன் இந்த
பணியில் இருந்த ஜே.ஏ.சரத் ரவீந்திர என்பவர் சிங்கள குடியேற்ற்ங்களுக்கு
ஒத்துழைக்காததால் வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
காணி அதிகாரம்
மாவட்ட செயலாளரின் நேரிடையிலான அதிகாரத்திற்கு உட்பட்ட காரணத்தினால் எம்.வை.எஸ்.
தேசப்பிரியவின் நியமனம் முக்கியமாக கருதப்படுகிறது.
தற்போது
நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் மற்றும் இராணுவ மற்றும் சுற்று சூழல்
அமைச்சகம் பங்கு பெற்றிருக்கும் கமிட்டி விரைவாக செயல்படுத்த ராஜபக்ச அரசு
முயலுகிறது.
மேலும் இந்தக்
குடியேற்றத்தினை நேரடியாக ராஜபக்சவின் அதிபர் மாளிகை தனது கட்டுப்பாட்டில் வைத்து
செயல்படுத்துகிறது என்பதை இந்த ஆவணத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள, நகல் அனுப்புவர் பட்டியலில்
குறிப்பிடப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
வவுனியா மற்றும்
முல்லைத்தீவு சிங்கள குடியேற்றம் மிக விரைவாக நடக்கிறது. இப்போது அரசின் கவனம்
மன்னார் மாவட்டம் பக்கம் திரும்பியுள்ளது.
நில உரிமை
அதிகாரம் சிங்கள மக்களுக்கு அளித்ததை அரசு உறுதி செய்கிறது. இதுவரை 10 ஆயிரம் சிங்கள குடியேற்றமும், உள்கட்டுமான வளர்ச்சியும் அப்பகுதியில் கடந்த
சில மாதங்களாக நடைபெற்றுள்ளது.
வவுனியாவிற்கு
இடம்பெயர்வதற்கு 6 லட்சம் பணமும்
நிலமும் சிங்களவர்களுக்கு வழங்கபடுகிறது. இது ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அம்மந்தோட்டா தொகுதி கிராம வாசிகளுக்கு
வழங்கபட்டுள்ளது.
அதற்கு வவுனியாவில்
பூர்வீக நிரந்தர வாசிகளாக மாறுவதற்கு ஒப்புதல் வாங்கபடுகிறது. மன்னாரில்
சிங்களவர்களின் குடியேற்றம் வடக்கு மாகாண தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியின்
வாக்கு வங்கி பாதிக்ககூடாதென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழீழ
படுகொலையில் மிக அதிக எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்ட பகுதியும் மன்னார்
மாவட்டப் பகுதியில்தான் என்பதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் மறுவாழ்வு
மையம் 2008 ஜூலை 22ம் தேதியில் மன்னாரில் 7650 தமிழ் குடும்பங்கள் கட்டாயமாக போரினால்
வெளியேற்றப்பட்டனர் என்று ஆவணப்படுத்தியது. இவர்கள் மன்னாரில் இருந்து
கிளிநொச்சிக்கு விரட்டப்பட்டனர்.
இந்த மக்கள்
தொகையில் 7200 பேர் மாணவர்கள்.
மன்னாரில் வெளியேற்றப்பட்ட 7650 குடும்பங்கள்
அல்லது கிட்டதட்ட 32000 தமிழர்களில்
வெறும் 470 தமிழர்கள்
மட்டுமே சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட முள்வேளி முகாமில் ஜூன் 15, 2009இல் ஆவணப்படுத்தப்பட்டனர்.
அப்படியென்றால்
மிச்சமிருக்கும் 31,500 தமிழர்கள் என்ன
ஆனார்கள் என்பதை இன்றுவரை உலகம் கண்டறிய முயலவில்லை. இத்தகைய படுகொலைகள் நிகழ்ந்த
மன்னாரில் தற்போது தமிழர்கள் நிலங்களில் சிங்களவர்கள் குடியேற்றங்கள் நிகழ்வது
ஆதாரப்பூர்வமாக வெளியாகிய பிறகு சர்வதேசமும், ஐ.நாவின் பாதுகாப்பு- பொதுச்சபையும் ஏன் இதுவரை
சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது.
மேலும்
தொடர்ச்சியாக இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவளிப்பதும் இலங்கை அரசு
இனப்படுகொலையை மூடிமறைக்க முயலுவதையும் தமிழின விரோத போக்காகவே பார்க்கப்பட வேண்டி
இருக்கிறது.
எல்லையோர
மாநிலங்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான இனம், பண்பாட்டுத் தொடர்புகளை பேணுகின்ற மாநிலங்களின்
கருத்துக்களை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இணைத்து பேசுகின்ற அல்லது
உள்ளடக்குகின்ற ஜனநாயகத்தினை இந்தியா இழந்து ஒரு சர்வாதிகார மையமாக
மாறிக்கொண்டிருக்கிறது.
இது
இந்தியாவினால் வலியுறுத்தப்பட்ட குறைந்த பட்ச ஜனநாயகத்தினையும்
மறுத்துக்கொண்டிருக்கிறது என்பதை இச்சமயத்தில் இந்திய அரசிற்கு தெரியப்படுத்த
விரும்புகிறோம்.
இந்த நாடு ஒரு
கூட்டாட்சியாக செயல்படும் பட்சத்தில் தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களை கண்டுகொள்ளாமல் தவிர்க்கும் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே
இலங்கை தொடர்ச்சியாக தமிழர்களை அழித்து வருகிறது என்பது உண்மை.
வெட்டவெளிச்சமாக
வந்துள்ள இந்த ஆவணத்தினைக் கொண்டு இலங்கை அரசின் மீது சர்வதேச சுதந்திர விசாரணையை
கொண்டுவர சர்வதேசமும், ஐ.நாவின் உயர்
அதிகாரிகளும் முயலவேண்டும். 2009இல் போர் முடிந்த
பொழுதிலேயே சர்வதேச விசாரணை வேண்டுமென்று ஐ.நா.வின் மனித உரிமைக் கமிஷன் மற்றும்
ஐ.நா.வின் தலைமைச் செயலருக்கான சட்ட ஆலோசகர் குழு பரிந்துரைத்திருந்தும் இதுவரை
அதை பான் கி மூன் உள்ளிட்ட அதிகாரிகளும் அவர்களுக்கு பின்னிருக்கும் மேற்குலகம்,
இந்திய அரசும் மறுத்து
வருகிறது.
இது போன்ற
அம்பலப்படுத்தப்பட்ட ஆவணங்கள், சனல் 4 இனால் வெளியிடப்பட்ட காணொளிகளைக் கொண்டு
சர்வதேசம் உடனடியாக குற்றவாளிகளை தண்டிக்க சர்வதேச விசாரணையை கொண்டு வரவேண்டும்,
மேலும்
பாதிக்கப்பட்டவர்களை காக்க தமிழீழ மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தனி
நாட்டினை அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment