பேரணாம்பட்டு
பாகர்உசேன் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சரண்ராஜ் (வயது 25). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி
வருகிறார். அதே ஊரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி மீது
இவருக்கு ஆசை ஏற்பட்டது.
மாணவியை அடிக்கடி
சந்தித்து பேச தொடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியிடம் பேசி அந்த
பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து
மாணவியை மிரட்டி கற்பழித்தார். மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை அவரது நண்பர்கள்
விமல் (25), ரூபன் (24)
ஆகியோர் கைப்பேசியில்
படம் பிடித்துள்ளனர்.
நடந்த சம்பவத்தை
வெளியே சொன்னால் கைப்பேசியில் உள்ள படத்தை ஊர் முழுவதும் பரப்பி விடுவோம் என
மிரட்டி அனுப்பி விட்டனர்.
மேலும்
அவ்வப்போது மாணவியை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். மாணவி வீட்டுக்கு தெரியாமல் நகைகளை
விற்று பணம் கொடுத்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து
பணம் சம்பாதிக்க விஜயகுமார் அமர்நாத் திட்டமிட்டு மாணவியின் சகோதரரிடம்
கைப்பேசியின் படத்தை காட்டினர். ரூ.50 ஆயிரம் தராவிட்டால் படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
அப்போது தான்
மாணவிக்கு நேர்ந்த கொடூரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அனைவரும்
அவமானத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஆனால் கும்பல் பணம் கேட்டு மிரட்ட
தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து
மாணவியின் குடும்பத்தினர் பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர்
இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்
ஜமுனாராணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
பள்ளி மாணவியிடம்
தகாத முறையில் நடந்த ஆசிரியரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பொலிஸ் சூப்பிரண்டு
விஜயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்
சங்கர் பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க
உத்தரவிட்டார்.
அதன்படி பள்ளி
ஆசிரியர் சரண்ராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment