Friday, 11 October 2013

பெண்ணின் உயிரை பறித்த காளான்

              
சுவிட்சர்லாந்தில் காளான் பறிக்கச் சென்ற பெண்ணொருவர் மலையிலிருந்து தவறி கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.
சுவிஸில் உள்ள டிசினோ பகுதி காளான்கள் அதிகம் விளையும் இடமாகும்.

மேலும் 5,000 வகையான காளான்கள் சுவிஸ் காடுகளில் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிசினோ பகுதியில் உள்ள சிமிடரா மலைப்பகுதியில் 49 வயதுடைய பெண்ணொருவரின் உடல் சுமார் 1.30 மணியளவில் இறந்த நிலையில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வாறு இறந்தார் என்ற விபரம் அறியப்படவில்லை, காளான் பறிக்கும் போது மலையில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.


இதற்கு முன்னதாக அக்டோபர் 1ம் திகதி 72 வயது முதியவர் காளான் பறிக்க சென்றபோது 200 மீற்றர் உயர மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment