Friday, 11 October 2013

அழகிகள் மீதான ஆசையால் மாட்டிக் கொள்ளும் அதிகாரிகள்


பதவி, பணத்தின் மூலம் தவறான உறவு வைத்துக் கொண்ட சீன அதிகாரிகள் தற்போது சிக்கலில் மாட்டி வருகின்றனர்.
சீனாவில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், அழகிகளுடன் தவறான உறவு வைத்துக் கொள்கின்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக் காட்சிகளும் தற்போது வெளியாகி வருவது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஊழல் எதிர்ப்பு அதிகாரிகள், இதுபோன்று தொடர்பு வைத்துள்ள உயர்அதிகாரிகளை காட்டிக் கொடுக்க வேண்டும் என்றும், ஊழலை ஒழிக்க உதவி செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் ஜி இன்ங்னான் என்ற 26 வயதுப் பெண் தன்னுடன் உல்லாசமாக இருந்த பான் யூ என்ற அரசு அதிகாரியின் புகைப்படங்களை வெளியிட்டது அவரது பணி நீக்கத்திற்கும், அரசு விசாரணைக்கும் வழி கோலியுள்ளது.

இதுமட்டுமின்றி, அந்த அதிகாரியுடன் வர்த்தக வளாகம் ஒன்றில் தான் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதையும், தனியார் நீச்சல்குளம் ஒன்றில் இருவரும் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்ததையும் அப்பெண் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனக்கு தினசரி செலவிற்காக 1000 டொலர்களும், வெளியில் சென்றுவர ஒரு உல்லாசக் காரும் கொடுத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் பணிபுரியும் அவர், பான் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என்று நம்பியதாகக் கூறினார்.

அவர் தன்னை ஏமாற்றியதால் லஞ்ச ஒழிப்புத்துறையையும் அணுகியதாகவும், அங்கும் பலன் கிடைக்காததால் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.


இதேபோன்று கடந்த மே மாதத்தில் எரிசக்தித்துறையில் உயர் அதிகாரியாக இருந்த லியு டினன் வங்கிகளில் 200 மில்லியன் டொலர் ஏமாற்றியது அவரது ஆசைநாயகி வெளியிட்ட புகைப்படங்களால் அம்பலத்துக்கு வந்தது.

No comments:

Post a Comment