Friday, 18 October 2013

ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் இந்திரராசா முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்


சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாமல் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.)  கட்சி சார்பில் போட்டியிட்ட ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினைச் சேர்ந்த மூவர் வவுனியாவில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளும் போது அதனைத் தவிர்த்திருந்த மாகாணசபை உறுப்பினர் இந்திரராசா முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வலி.மேற்கு சங்கானைப் பிரதேச சபை கட்டிடத் தொகுதித் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வருகை தந்திருந்தார்.

இதன்போதே அவர் முன்னிலையில் இந்திரராசா சத்தியப் பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment