இதன் மூலம்
முழங்காவில் பிரதேசத்தில் உள்ள வேரவில்,வலைப்படு, கிராஞ்சி ஆகிய
பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்த பிரதேசங்களில் வாழமுடியாத சூழ்நிலைகள் உருவாகி
அவர்களாகவே வெளியேற வேண்டிய துர்ப்பாக்கியமான நிலை இப்பகுதி வாழ் மக்களுக்கு
ஏற்படும்.
ஏற்கனவே பூநகரிப்
பிரதேசத்தில் உள்ள கௌதாரிமுனையில் உள்ள மணல் வளம் முற்று முழுதாக சூறையாடப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
பலகோடி ரூபா பெறுமதியான
தமிழர் பிரதேசத்தில் உள்ள சொத்துக்களை சூறையாடி அவற்றைக் கொண்டு சென்று சீமெந்து
உற்பத்தி செய்யது மீண்டும் அவற்றை தமிழ்ப் பிரதேசங்களில் விற்பனை செய்வதுடன்,
தமிழர்களுடைய பூர்விகமாக
வாழ்ந்த பிரதேசங்களில் இருந்து அவர்களை வெளியேற்றி அவர்களின் இன அடயாளங்களை
அழிக்கும் ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக இது அமைகின்றது.
பாராளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபை
உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை, முழங்காவில் பிரதேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் சி.ஸ்ரீறஞ்சன்,
கிளிநொச்சி மாவட்ட இளைஞர்
அணியின் செயலாளர் கு.சர்வானந்தா ஆகியோர் நேரில் சென்று பிரதேசத்தை பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment