2014ம்
ஆண்டுக்கான சுற்றுலா பயணிகள் செல்வதற்கான சிறந்த இடங்களின் டாப் 10 பட்டியலில்
சூரிச் இடம்பெற்றுள்ளது, இதனை Lonely Planet travel வெளியிட்டுள்ளது.
சூரிச் நகரம்
நவநாகரீகமான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுடன் வளர்ச்சி பெற்று காணப்படுவதாகவும்
தெரிவித்துள்ளது.

மற்றொரு காரணமாக
2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற
உள்ளது, இதனை பார்த்து ரசிக்கவும் ரசிகர்கள் வந்து
குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில்
ஷாங்காய், வான்கூவர், சிகாகோ, ஆக்லாந்து மற்றும் நியூசிலாந்து நகரங்கள்
இடம்பெற்றுள்ளன.
மேலும் பெரிய
நகரங்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்து 5வது இடத்தில் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment