Wednesday, 23 April 2014

தேவியன் பயன்படுத்திய வேன் புலனாய்வுப் பிரிவினரால் மீட்புபணத்தை வெளிநாட்டில் உள்ள தமிழர்களே கொடுத்தார்களாம்..

சமீபத்தில் விடுதலைப் புலிகள் இணைந்து ஒன்றுசேர்கிறார்கள் என்ற கதையை அரங்கேற்றி, பின்னர் கோபி, தெய்வீகன், மற்றும் அப்பன் ஆகியோர் நெடுங்கேணியில் வைத்து இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் பாவித்த மோபைல் தொலைபேசியில் உள்ள இலக்கங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக கூறி சுமார் 40 தமிழர்களை இலங்கை இராணுவம் கைதுசெய்துள்ளது. இதேவேளை நல்லூரில் தெய்வீகன் மற்றும் கோபி பாவித்ததாக கூறப்படும் வெள்ளை நிற வான் ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைக்கே இந்த வாகனம் பாவிக்கப்பட்டது என்று இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. குறித்த இந்த வாகனம் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர், இதனை வாங்க பணத்தை வெளிநாட்டில் உள்ள தமிழர்களே வழங்கியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனூடாக இனி இந்தப் பணத்தை யார் அனுப்பியது என்ற பொய்யான பட்டியல் ஒன்றை, இலங்கை இராணுவம் வெளியிட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மறைவான இடத்தில் இருந்த வானை தாம் கண்டுபிடித்துள்ளதாக கூறும் இராணுவத்தினர் அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.



No comments:

Post a Comment