ஒரு தாய்,
இரண்டு குழந்தைகள்
பெறுவது இயல்பு. ஆனால், 2 தாய்மார்கள்
சேர்ந்து ஒரு குழந்தையை பெறுவது மிக மிக அபூர்வம். அமெரிக்காவில் நியூயார்க்
நகரில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சாரா மார்ஷல்
(வயது 40). என்ற பெண்ணும்,
மேகி லெய்க் (35) என்ற பெண்ணும் தோழிகள். இருவரும் சேர்ந்து
குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர். அதற்காக, நியூயார்க்கில் உள்ள டாக்டர் ஆலன் காப்பர்மன்
என்பவரின் ஆஸ்பத்திரியை அணுகினர்.
குழந்தையின்
பிறப்பு சான்றிதழில், பெற்றோர் என்ற
இடத்தில், சாரா–மேகி என இரண்டு பெண்களின் பெயர்களும் இடம்
பெற்றுள்ளன. இதன்மூலம், ஒரு குழந்தைக்கு 2 தாய்மார்கள் கிடைத்து விட்டனர்.
இந்த சாதனையை
அவர்கள் எளிதாக படைத்து விடவில்லை. இதற்கு முன்பே, இரண்டு தடவை முயன்றும், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
ஒருதடவை முயற்சி செய்வதற்கு, 20 ஆயிரம் டாலர்
செலவாகும். மூன்றாவது முயற்சியில் ரூ.62 லட்சம் செலவழித்து, இச்சாதனையை
படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment