பாடசாலையின்
இரண்டாவது மாடியில் உள்ள பாத்ருமில் இரத்தம் காணப்பட்டதாகவும் அதனடிப்படையில்
மேற்கொள்ளப் பட்ட விசாரனை மூலம் கொலின் றிற்சர் என்ற 24-வயதுடைய ஆசிரியையின் உடல் கண்டு பிடிக்கப்
பட்டது. டென்வர் உயர்தர பாடசாலை கணித ஆசிரியரான இவர் பாடசாலையில் இருந்து செவ்வாய்
கிழமை வீடு திரும்பவில்லை என அறிவிக்கப் பட்டதாக மாவட்ட சட்டத்தரணி ஜொனதன்
புளொடகெற் தெரிவித்துள்ளார்.
Philip Chism என்ற சந்தேக
நபர்மீது புதன்கிழமை கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு ஜாமின் இன்றி வைத்திருக்கும்
படி கட்டளை இடப்பட்டுள்ளது. இவன் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு செல்லவில்லை
என்றும் புதன்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு
வீதியில் நடந்து கொண்டிருக்கையில் பிடிபட்டதாகவும் தெரியவருகின்றது.
Chism றிற்சரை அடித்து
கொன்றுள்ளதாக குற்றவியல் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இவனது
குற்றவிசாரனை வயதுவந்தவர்களுக்கான நிதிமன்றத்தில் இடம்பெற்றதாகவும், அவனது வழக்கறிஞர் இவனது வயது கருதி
சட்டநடவடிக்கைகள் மூடப்படவேண்டுமென்றும் இவன் மறைவாக இருக்க அனுமதிக்க வேண்டும்
என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நீதிபதி இவ்வேண்டுகோளை மறுத்து விட்டதாக
தெரியவருகின்றது.
டென்வேர்ஸ்
பகுதியில் உள்ள சகல பாடசாலைகளும் புதன்கிழமை மூடப்பட்டன.
No comments:
Post a Comment