Monday, 30 September 2013

கொழும்பில் இராவணனுக்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கோத்தபாய


கொழும்பு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தெவ்ரம் விகாரை நேற்று இலங்கை வேந்தன் இராவணனுக்கான பெரஹெர (திருவிழா) ஒன்றை நடத்தியது.

இதில் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

பண்டைய காலத்தில் இலங்கையை ஆட்சி செய்ததாக கூறப்படும் இராவணன் மன்னரை அடையாளப்படுத்தி நடத்தப்பட்ட இந்த பெரஹெர பண்டடைய பாரம்பரிய கலாசார அடையாளங்களுடன் நடத்தப்பட்டது.

இந்தியா, இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்குவதற்கு எதிராக பொதுநல வழக்கு


இந்தியா இரண்டு போர்க் கப்பல்களை இலங்கைக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரி பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

சென்னையை சேர்ந்த சட்டத்தரணி கே.ஸ்டாலின் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

புத்தளத்தில் மீண்டும் தேர்தலை நடாத்துமாறு மனுத் தாக்கல்


புத்தளத்தில் மீண்டும் தேர்தலை நடாத்துமாறு கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட தேர்தல் முடிவுகளை ரத்து செய்து, மீளத் தேர்தலை நடாத்துமாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனசெத்த என்ற அமைப்பினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனசெத்தவின் பொதுச் செயலாளர் பத்தரமுல்ல சீலரட்ன தேரர் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இலங்கை மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்! ஜி.ராமகிருஷ்ணன்


 இலங்கை மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,

கிரீன் காட் குலுக்கல் அமெரிக்க வீசா! 2015 ஆண்டுத் திட்டம் ஆரம்பம்!- கொழும்பு தூதரகம் அறிவிப்பு


பச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் (Green Card Lottery)  என்று அழைக்கப்படும் 2015 அதிஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித் திட்டம், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.
பச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் சீட்டு தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கை,

2013 ஒக்டோபர் 01ம் திகதி இலங்கை நேரம் பிற்பகல் 09.30 மணி முதல், 2013 நவம்பர் 02ம் திகதி பிற்பகல் 09.30 மணி வரை மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் இணையத்தளத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும்.

பதுளையில் சயனைட் மற்றும் கைக்குண்டுடன் ஒருவர் கைது


பதுளை வெலிமடை கலுலந்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் சயனைட் குப்பியுடன் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிமடை பிரதேச்தை சேர்ந்தவர். அவது வீட்டில் டின் ஒன்றுக்குள் இந்த கைக்குண்டும் சயனைட் குப்பியும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த சந்தேக நபர் 72 மணித்தியாலங்கள் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பிரான்ஸில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகள்


தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் என்ற அடிமுடி தோன்றா அற்புதத் தியாகியின், 26ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு இன்று, பாரிசின் புறநகர்ப் பகுதியான மொந்ரோயில் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும் எழுச்சிடனும் நடைபெற்றது.
பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் தேசியச் செயற்பாட்டாளர் திரு. பார்த்திபன் தலைமையில் மாலை ஆறு மணிக்குஆரம்பித்தன.
.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் - ஆளுநர் சந்திரசிறிக்கும் இடையில் சந்திப்பு.


வடக்கு மாகாணசபையின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் பெயர் பட்டியலை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் இன்று கையளித்துள்ளார்.

மாங்காய் சாப்பிட்ட மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி: மட்டக்களப்பில் சம்பவம்


மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலர் இன்று திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலை விடுதியில் 77 மாணவிகள் தங்கியிருக்கின்றனர். அம்மாணவிகளில் 7 பேரே திடீர் சுகயீனமுற்றுள்ளனர்.

இவர்கள் சிகிச்சைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் ஆசியுடன் தமிழீழத்தை உருவாக்க விக்னேஸ்வரன் திட்டம்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை


தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு தனி தமிழீழத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என அந்த அமைப்பினர் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் 29 ஆயிரம் விதவைகள்! சமூக சீரழிவுகள் அதிகரிப்பு: மட்டு.அரச அதிபர்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 ஆயிரம் விதவைகள் உள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட ஒன்று கூடல் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
 

தீவக பகுதிகளில் இரவு நேரங்களில் வன்முறைக் கும்பல் தொடர் அட்டகாசம்!


தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களை அச்சுறுத்தும் வகையில் தீவகப் பகுதிகளில் இரவு நேரங்களில் வன்முறைக் கும்பல்கள் செயற்பட்டு வருவதால் பல பகுதிகளில் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இல்லாதவாறு அண்மையில் நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் தீவகப் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. ஊர்காவற்துறை தொகுதியையும் தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றியது.

டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சொகுசு கப்பலான 'டைட்டானிக்' தனது முதல் பயணத்தின் போதே நியூயார்க் நகருக்கு செல்லும் வழியில் 15-4-1912 அன்று கடலில் மூழ்கி ஜலசமாதியானது.
வட அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த கோர விபத்து நேர்ந்த போது டைட்டானிக் கப்பலில் 2 ஆயிரத்து 224 பயணிகள் இருந்தனர்.

கப்பல் இரண்டாக பிளந்ததால் ஆயிரக் கணக்கானவர்கள் கடல் நீரில் மூழ்கி உடல் உறைந்து பரிதாபமாக பலியாகினர். 710 பேர் மட்டுமே மீட்பு படகுகளின் மூலம் உயிர் தப்பி நியூயார்க் நகருக்கு வந்து சேர்ந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் பிரேதங்கள் உரிய மரியாதையுடன் சிறப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டதாக நேற்று வரை கூறப்பட்டு வந்தது.

அதிரவைக்கும் உலக இருதய முகாம்


ஒரு வருடத்திற்கு 17.3 லட்சம் பேர் இதய நோயால் உயிரிழக்கின்றனர் என்ற அதிச்சி தகவலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் இதயவியல் துறை தலைவர் மருத்துவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள அறிவியல் மையத்தில் உலக இருதய தினத்தை முன்னிட்டு நெல்லை மருத்துவக் கல்லூரி இருதய நோய் சிகிச்சைப் பிரிவின் சார்பில் உலக இருதய தின முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் இ.சி.ஜி. போன்ற சோதனை கள் மருத்துவக் குழுவினரால் இலவசமாகவே நடத்தப்பட்டது.
 

சாலை விபத்தில் மாணவன் உயிரிழப்பு


பிரான்சில் சாலை விபத்தில் பிரிட்டனை சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்சில் உள்ள மான்ட்பில்லர் நெடுஞ்சாலையினை கடக்கும் போதே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று பிரான்ஸ் விடுதியில் தங்கியிருந்த பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 6 மாணவர்கள் மான்டர்பில்லர் நெடுஞ்சாலையினை கடக்க முயன்றுள்ளனர்.

ஒரே செடியில் விளையும் தக்காளி, உருளைக்கிழங்கு... நம்பமுடியாத உண்மை....

ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம்.

மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம்.

இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன.

இதன் பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது.


இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த முறையை தற்போது நியூசிலாந்து நாட்டு விவசாயிகளும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிடம் 75 ஆயிரம் கோடி ரூபா கடன்- சந்திரிக்காவுடன் இணைந்து ரணில் சதித்திட்டம்


அரசாங்கம் வெளிநாடுகளில் இதுவரை 75,000 கோடி ரூபா கடனை பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். தேசிய சேமிப்பு வங்கியில் 9 சதவீத வட்டிக்கு அரசாங்கம் 750 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுகாக 500 கோடி ரூபா செலவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மாநாடு முடிவடைந்த பின்னர் அமைச்சர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்கப்படும்.

லண்டனில் திருட்டு கிரெடிட் அட்டையில் பண மோசடி செய்து நான்கு இலங்கையர்கள் கைது


லண்டனில் திருட்டு கிரெடிட் அட்டையில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை பிரஜைகள் நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் க்ளொஸ்டர்செயர் பிரதேசத்தில் தொடர்ச்சியான தன்னியக்க கருவியில் பண மோசடி செய்துள்ளனர்.

மட்டக்களப்புக்கு சட்டவிரோத துப்பாக்கியுடன் தப்பிச் செல்லமுயன்ற இராணுவ வீரர் கைது


சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றையும் தோட்டக்களையும் வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் மொனராகலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர் கைது செய்யப்பட்டார்.

லண்டனில் நடைபெற்ற இன அழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாடு!


இன அழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாடு ஒன்று நேற்று லண்டனில் நடைபெற்றது.
மத்திய லண்டன் பகுதியில் அமைந்துள்ள பிரபல்யமான அம்பஸடர் ஹொட்டேலில் இடம்பெற்ற மாநாட்டில், ஆரம்ப நிகழ்வாக இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்களுக்காகவுமென பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பொதுச்சுடரினை சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஆரம்பமான மாநாட்டில் சர்வதேச பிரமுகர்களின் உரையும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை புள்ளிவிபரத்துடனும், ஆதார வரை படங்கள், மற்றும் சாட்சியங்களோடும் இளையோரினால் எடுத்துவிளக்கப்பட்டது. இது அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தது.
 

வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்


வவுனியா அல் காமியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 18ம் திகதி மாலை 5.00 மணி தொடக்கம் காணமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கார்த்திகேசு நிருபன் (வயது 38) என்னும் ஆசிரியரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.


வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதாகக் கூறி, புறப்பட்ட இவர் இன்று வரை வீடு வந்து சேரவில்லை. இவரை இராணுவ புலனாய்வாளர்கள் கடத்தியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வியே எமது இனத்தின் முதுகெலும்பு: பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதிவழங்கும் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் குருகுலராசா


போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாத காலமாக 35 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு நிதியுதவி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுவலுவுள்ளோர், விதவைகள் மற்றும் சிறுவர்களுக்குமான அமைப்பு (NOW WOW) மாதாந்தக் கொடுப்பனவு திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
 

வாழைச்சேனையில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தையின் சடலம் மீட்பு


கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தச் சடலத்தில் தலையும் மார்புப் பகுதியும் மாத்திரம் உள்ள நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள கொண்டயன்கேணி முருகன் கோவில் வீதியிலேயே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 

அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Dolphin Browser


கூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக அன்ரோயிட் காணப்படுகின்றது.
இந்த இயங்குதளத்திற்கென பல்வேறு மென்பொருட்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இதன் அடிப்படையில் இவற்றில் பயன்படுத்தப்பட்டுவரும் குரோம், பயர்பொக்ஸ் உலாவிக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய டொல்பின் எனும் புதிய உலாவி அறிமுகம் செய்யப்ட்டுள்ளது.

இதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
 தரவிறக்க சுட்டி


 



          
                                 
                                 
                 

                 
                                 
                                 
                                 
                                 
                                 
               

திடீரென தீப்பிடித்து எரிந்த படகு! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணிகள்


இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா படகொன்று நண்பகலில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் 30 பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
லண்டன் நாடாளுமன்றத்தின் அருகே நடந்த இந்த விபத்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீப்பிடித்து எரிய தொடங்கியவுடன், செய்வதறியாத நிலையில் மக்கள் தண்ணீருக்குள் குதித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த மீட்புபடையினர், ஆபத்தில் இருந்த மக்களை மீட்டனர்.

நீரில் நனைந்த மற்றும் குளிரில் பாதிக்கப்பட்டுள்ள 28 பயணிகளுக்கு இரண்டு குழுவினர் சிகிச்சையளித்து வருவதாக லண்டன் அம்பியுலன்ஸ் சேவை தெரிவித்தது.

இதனால் ஏற்பட்ட புகையை சுவாதித்த ஏழு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீப்பற்றிய படகு லண்டன் டக்டுவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.


இந்த சம்பவம் பற்றி தற்போது எந்த கருத்துக்களை வெளியிட முடியாது என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜோன் பிக்கோஸ் தெரிவித்துள்ளார்.

Saturday, 28 September 2013

ஜனாதிபதியின் நோக்கத்தை தோற்கடிக்க திட்டம் தீட்டிய அமைச்சர்கள்?: கோத்தபாய தீவிர விசாரணை!


வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது, சிலர் ஜனாதிபதிக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளனரா என்பதை கண்டறிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அரச புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிலரே இவ்வாறு சூழ்ச்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.