Friday, 1 November 2013

நட்புறவில் பின்னோங்கும் பிரான்ஸ்


எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
எச்எஸ்பிசி என்ற அமைப்பு உலகளவில் அதிகளவான வருமானம், குழந்தைகள், அலுவலகத்தில் சக நட்புறவு, வாழ்க்கை நிலைமைகள் தொடர்பில் 37 நாடுகளை சேர்ந்தவர்களிடம் புதிய கருத்து கணிப்பொன்றை மேற்கொண்டது.

இந்த நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் 17வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் ஜேர்மனியும் உள்ளன.

சில எதிர்பார்ப்புகள் தொடர்பான விடயங்களில் பிரான்ஸ் நடுநிலையில் உள்ளது.


மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எதிர்பார்த்த வாழ்க்கைக்கான விடயங்களில் பிரான்ஸ் மோசமான நிலைமையில் இருப்பதாக உள்நாட்டில் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெவ்வேறு நாடுகளுடன் பார்க்கும் போது ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன.

இதில் ஜேர்மனியில் வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புகள் சிறந்த நிலையில் இருக்கின்றன.

பிரான்சிலும், ஸ்பெயினிலும் அப்படியான நிலைமைகள் குறைந்து காணப்படுகின்றன என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா