Friday, 1 November 2013

வில்பத்து காட்டில் படையினர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் புலி உறுப்பினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்


வில்பத்து தேசிய வனப்பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று அனுராதபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.



அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி உத்தரவிட்டார்.

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி வில்பத்து தேசிய வனப்பகுதியில் இராணுவ ஜீப் வண்டி மீது நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் அனுராதபுரம் சாலியபுர இராணுவ முகாமின் கஜபா படைப் பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினட் கர்ணல் ஜயந்த சுரவீர உட்பட 4 இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.


இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்...

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா