Wednesday, 11 December 2013

வட மாகாண சபையின் முதலாவது வரவு-செலவுத்திட்டம் இன்று சபையில் சமர்பிக்கப்பட்டது.



நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் வட மாகாணத்திற்காக சொற்ப அளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாக இதன்போது உரையாற்றிய முதலமைச்சர் சி.வீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

இன்று காலை ஒன்பது மணிக்கு வட மாகாண சபை கூடியபோது முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் மாகாணத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்தார்.

அதன் பின்னர் முதலமைச்சர் மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்த கருத்து :-

நாட்டின் பட்ஜெட்டையும் எங்களுடையதையும் எடுத்துப் பார்த்தால் மிகவும் சொற்பமான ஒரு தொகை எமக்கு தரப்பட்டுள்ளது. தரப்பட்டுள்ள அந்தத் தொகையை வைத்தே நாம் எதையும் செய்யக்கூடியதாக இருக்கின்றது. விரைவாக வட கிழக்கில் இப்போதிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அவர்களின் கருத்துக்களை அறிய சர்வதேச பொறுமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். எமக்கு கிடைக்கப் போகும் நிதி உதவி மிகச் சொற்பமே. அங்கவீனர்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை நல்வாழ்வு பெற பிறநாட்டு உதவிகளுடன் கரைசேர்க்க எண்ணியுள்ளோம். இவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருக்காது என்று நம்புகின்றோம். சர்வதேச சமூகத்தையே நம்பவேண்டி இருக்கின்றது. அது தான் இப்போழுது காலத்தின் தேவையாக இருக்கின்றது போல் தெரிகின்றது.

அதன் பின்னர் மாகாண சபையின் 8 உறுப்பினர்களால் 13 பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

வட மாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும், ஜனாதிபதியின் நம்பிக்கையை வென்ற தமிழ் பிரதிநிதியொருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 13 பிரேணைகள் மாகாண சபையின் பிரதிநிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த 13 பிரேணைகளும் சபையில் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை, வட மாகாணத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும், வலிகாமம் வடக்கில் காணிகள் உரிய முறையில் பகிரப்பட வேண்டும் ஆகிய விடயங்களை வலியுறுத்தி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று மாகாண சபைக்குள் கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமது கோரிக்கைகளை வலியுத்தும் வகையில் அவர்கள் சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்

ஜெர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்பளித்துள்ளது.

 Photo: ஈழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையே இந்தியா, உதவியது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அல்ல – ஜெர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்பளித்துள்ளது.


ஜெர்மனியில் கடந்த மூன்று நாட்களாக நடைப்பெற்ற விசாரணையின் இறுதியில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

தீர்ப்பு:
1) சிங்கள அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது.

2) தமிழீழ இனப்படுகொலைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் சிங்கள அரசுக்கு துணைப்போயுள்ளன.

3) தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல.

கடந்த ஒரு வார காலமாக, ஜெர்மனியின் பெரிமனில் இந்த தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன.இலங்கை அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒன்றியம் (International Human Rights Association) மற்றும் இலங்கை சமாதானத்திற்கான ஐரிஸ் போரம் (Irish Forum for Peace in Sri Lanka) ஆகியன கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.
ஈழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையே இந்தியா, உதவியது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அல்ல ஜெர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்பளித்துள்ளது.
ஜெர்மனியில் கடந்த மூன்று நாட்களாக நடைப்பெற்ற விசாரணையின் இறுதியில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

தீர்ப்பு:
1) சிங்கள அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது.

2) தமிழீழ இனப்படுகொலைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் சிங்கள அரசுக்கு துணைப்போயுள்ளன.

3) தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல.

கடந்த ஒரு வார காலமாக, ஜெர்மனியின் பெரிமனில் இந்த தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன.இலங்கை அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.


இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒன்றியம் (International Human Rights Association) மற்றும் இலங்கை சமாதானத்திற்கான ஐரிஸ் போரம் (Irish Forum for Peace in Sri Lanka) ஆகியன கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.

2009ம் ஆண்டு ஈழத்தில் தமிழர்கள் எவ்வாறான மனநிலையில் இருந்தார்கள்,

ஜோ்மனியில் நடைபெறும் தீா்ப்பாயத்தில் காண்பிக்கப்பட்டவீடியோ மேற்குறித்த வீடியோ சம்பந்தப்பட்ட தரப்புக்களால் அனுப்பிவைக்கப்பட்டது (இழகிய மனம் உடையவா்கள் பாா்ப்பதை தவிக்கவும்)

2009ம் ஆண்டு ஈழத்தில் தமிழர்கள் எவ்வாறான மனநிலையில் இருந்தார்கள், அங்கே கொத்துக்கொத்தான எப்படி மக்கள் கொல்லப்பட்டார்கள் , அங்கிருந்த மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எவ்வாறு நடுங்கிக்கொண்டு ஓடினார்கள்,


எல்லாம் வீடியோவாக உள்ளது. அனைத்தையும் அவதானித்த இந்தியா என்ன செய்தது ? தற்போது சிதம்பரம் நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறாரே ஏன் ? குறிப்பிட்ட இந்த வீடியோவை நாம் , 540 இந்தியப் பாராளுமற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சாலாக அனுப்பியுள்ளோம்.

Friday, 1 November 2013

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பால் பொருட்கள்


குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பால் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால் அவர்களுக்கு கால்சியம், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் போன்றவை கிடைக்கும்.

கொழுப்புக்கள் என்றதும் பயப்பட வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள கொழுப்புக்கள் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

 

நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெரா அறிமுகம்


Ion எனும் நிறுவனமானது Air Pro 3 எனும் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெராவினை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
நீரினுள் 49 அடிகள் ஆழம் வரை கொண்டு சென்று பயன்படுத்தக்கூடியதாக காணப்படும் இக்கமெராவானது 60 fps வேகத்தில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக உள்ளது.

மேலும் இதில் 12 Megapixel Sony IMX117 CMOS சென்சார் காணப்படுகின்றது.

வயர்லெஸ் தொழில்நுட்பமான Wi-Fi இனையும் கொண்டுள்ள இக்கமெரா மூலம் 160 டிகிரியில் காட்சிப்பதிவு செய்ய முடியும்.

இதன் விலையானது 350 டொலர்களாகும்

2014ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளை கவரும் சூரிச்


சுற்றுலா பயணிகள் செல்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் சூரிச் இடம்பெற்றுள்ளது.
2014ம் ஆண்டுக்கான சுற்றுலா பயணிகள் செல்வதற்கான சிறந்த இடங்களின் டாப் 10 பட்டியலில் சூரிச் இடம்பெற்றுள்ளது, இதனை Lonely Planet travel வெளியிட்டுள்ளது.

சூரிச் நகரம் நவநாகரீகமான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுடன் வளர்ச்சி பெற்று காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் தற்போதைய நிலை…

kele_kanakapurim

                யார பாத்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க....நானா கொமடி பீஸ்?
                இப்படி ஒரு அவமானம் தேவையா பாஸ் உங்களுக்கு....
                அடடா....இப்ப என்ன நடந்துச்சுன்னு இவங்க இப்படி அழறாங்க...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினரது பாரிய படை முகாம் அமைக்கப்பட்டுவருவதையும்

முள்வேலியால் சுற்றி அடைக்கப்பட்டுவருவதையும் படங்களில் காணலாம்.மாவீரர் துயிலும் இல்லம் சிதைத்து அழிக்கப்பட்டதன் பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களில் எருக்கலை பெருமளவில் முளைத்துக் காணப்பட்டது. மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிரமதானம் மூலம் துப்பரவு செய்வதாக

பிரதேச சபைகள் தீர்மானம் எடுத்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர் மாவீரர் துயிலும் இல்லங்களில் சென்று அக்காணிகளை முட்கம்பி வேலி போட்டு அடைத்து பாரிய படை முகாம்களை அமைத்து வருகின்றார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு கிட்ட எவரும் போகமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையும் இதனால் மாவீரர்களது பெற்றோர்கள் மிகுந்த கவலையும் சினமும் கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
kele_kanakapurim4

யாழ். காங்கேசன்துறைப் பகுதியில் சிங்கி இறால்…

a00(2703)

     யார பாத்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க....நானா கொமடி பீஸ்?
     இப்படி ஒரு அவமானம் தேவையா பாஸ் உங்களுக்கு....
     அடடா....இப்ப என்ன நடந்துச்சுன்னு இவங்க இப்படி அழறாங்க...

யாழ். காங்கேசன்துறைப் பகுதியில் அனுமதியின்றி பிடித்து வைத்திருந்த சிங்கி இறால் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது..
seingeseinge1

சு. ப. தமிழ்ச்செல்வன் இழப்புக்கு தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கை

lead21
தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.
03.11.2007

எனது அன்பான மக்களே!

சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைததுலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை.

தேசிய தலைவரது மகள் துவாரகா? ஐயோ அது நானில்லை, உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியா


போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட, தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான, இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், அவர் சிறிலங்காப் படையினரால் உயிரோடு பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் காணொலி ஆதாரத்தை சனல் 4 நேற்று வெளியிட்டுள்ளது.
<iframe width="580" height="315" src="//www.youtube.com/embed/915_gGRZ5Lw" frameborder="0" allowfullscreen></iframe>

கடற்கரை ஒன்றில், மேலாடையின்றி நீருக்குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை, சிறிலங்காப் படையினர், வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

ஆறு சிறிலங்காப் படையினர் அவரைப் பிடித்து வருவதும், அப்போது அவர்கள் பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறுவதும், அதற்கு அவர் ஐயோ அது நானில்லை என்று அழுவதும் காட்சியில் பதிவாகியுள்ளது

இதன் மூலம் இசைப்பிரியா சிறிலங்கா படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலையிலும், துணி அகற்றப்பட்ட நிலையிலும், இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கொமன்வெல்த் மாநாட்டை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், இந்த புதிய போர்க்குற்ற ஆதாரம் வெளியாகியுள்ளது

ஈ.பி.டி.பி யினால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துக!- ஐங்கரநேசனிடம் மக்கள் வேண்டுகோள்


வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி, மணல் அகழ்வை ஒழுங்குபடுத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பன் பொதுநோக்கு மண்டபத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசனைச் சந்தித்த அப்பகுதி மக்கள் அங்கு மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு குறித்துத் தங்களது கடுமையான விசனத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
 

மட்டக்களப்பில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களை வெளியேற்ற நடவடிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறி குடியேறியவர்கள் ஒருமாத காலத்துக்குள் வெளியேற வேண்டும் என்று மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
உன்னிச்சை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வெட்டிப்போட்டசேனைப் பகுதியிலே 160 ஏக்கர் காணிகளில் 23 பேர் அத்துமீறி சேனைப் பயிர்களில் ஈடுபட்டுவதுடன் சேனைப் பயிர்களை மேற்கொள்வதற்காக காடுகளை அழித்தும் வருகின்றனர்.

வேலணை மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவில் சிறீதரன் எம்.பி, வடமாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்க​ள் பங்கேற்பு


யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாகாண உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரி தின விழாவும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு சி. கிருபாகரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

வில்பத்து காட்டில் படையினர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் புலி உறுப்பினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்


வில்பத்து தேசிய வனப்பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று அனுராதபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

காதல் உணர்வை தூண்டும் இயற்கை உணவுகள்


மனிதர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது உணவு வகைகள் தான். வேக வைக்கப்பட்ட காய்கறிகளையோ, பச்சை காய்கறிகளோ சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
இயற்கையான சில உணவு வகைகள், பாலியல் உணர்வுகளை தூண்ட செய்கிறது.

ஒயின்

ஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது.

போர்ச்சுகல் தேசத்தை தாயகமாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக உணர்வை தூண்டும் பொருளாகக் கருதப்படுகிறது. ஒயினானது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது.

உடலில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளது.
 

நட்புறவில் பின்னோங்கும் பிரான்ஸ்


எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
எச்எஸ்பிசி என்ற அமைப்பு உலகளவில் அதிகளவான வருமானம், குழந்தைகள், அலுவலகத்தில் சக நட்புறவு, வாழ்க்கை நிலைமைகள் தொடர்பில் 37 நாடுகளை சேர்ந்தவர்களிடம் புதிய கருத்து கணிப்பொன்றை மேற்கொண்டது.

இந்த நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் 17வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் ஜேர்மனியும் உள்ளன.

சில எதிர்பார்ப்புகள் தொடர்பான விடயங்களில் பிரான்ஸ் நடுநிலையில் உள்ளது.

“கிராமத்தின் அடையாளம் வௌவால்” வெடி வெடிக்காத மக்கள்


வௌவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக கிராம மக்கள் வெடி வெடித்து கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் என்ற கிராமத்தில் பீமேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவியின் தாமரைக்குளம் அருகே 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வசித்து வருகின்றன.

இலங்கைப் போர்க்குற்றம்! சனல் 4 வெளியிட்ட புதிய காணொளி



பிரித்தானியாவை மையமாக கொண்டியங்கும் சனல் 4 ஊடகம் அவ்வப்போது இலங்கைப் போர்க்குற்றங்களை காணொளியாக அம்பலப்படுத்திவரும் இந்நிலையில் இன்றும் ஒரு சிறு காணொளியினை வெளியிட்டுள்ளது.

Wednesday, 30 October 2013

வலி. வடக்கில் வீடுகள் இடிக்கப்பட்டமை உள்நாட்டு பிரச்சினை! முதலமைச்சருடனான சந்திப்பின் பின் அமெரிக்க தூதுவர்!


வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார்.

அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

 <iframe width="580" height="360" src="//www.youtube.com/embed/KSkzuQIDOrY" frameborder="0" allowfullscreen></iframe>

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு தென் கொரியா உதவும்: விக்னேஸ்வரனிடம் தென் கொரியத் தூதுவர் உறுதி


இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்ததுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
தென் கொரியத் தூதுவர் முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு சிறை!


இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மகள்களையும் அடிக்கடி பாலியல் ரீதியான வன்புணர்ந்த தந்தைக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதவான் பேமா ஸ்வர்னாதிபதி இந்தத் தண்டனை விதித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி


வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட மாகாண முதலமைச்சர் இருதய பரிசோதனைக்காக இன்று மதியம் 1.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்த நிலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.


முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்த பணிப்பாளர், இருதயப் பரிசோதனையின் பின்னர் 24 மணிநேரம் வைத்தியர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற இருப்பதால் அவர், வைத்தியசாலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

டயானாவின் ரகசிய செக்ஸ் டைரி அம்பலம்


இங்கிலாந்தின் இளவரசி டயானாவின் ரகசிய செக்ஸ் டைரியில் எழுதப்பட்டிருந்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் பரூக் தோதியுடன் பாரீஸில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.

இந்நிலையில் டயானாவின் காதலர்கள் குறித்து அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்த சிமோன் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் ஒரு நாளைக்கு 200 பெண்கள் மீது பாலியல் பலாத்காரம்


அனைத்து நாடுகளிலுமே பெண்களுக்கு போதிய பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பிரான்சிலும் இந்த நிலை உள்ளது.
ஆனால் பிரான்சை விட இந்தியாவில் உள்ள பெண்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனர் என பிரான்ஸ் அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம் பேசினார்.

பிரான்ஸ் நாட்டின் பெண்கள் நலத் துறை அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம், நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவர் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே பல விஷயங்களில் தொடர்பு உள்ளது.

பெண்கள் நலனுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இரு நாடுகளிலும் அதிகமாக உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று, தொடர்புடையதாக உள்ளன.

டெல்லியில் கடந்தாண்டு மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து பத்திரிகைகளில் விரிவான செய்திகள் வெளியாகி இருந்தன. பிரான்சு பத்திரிகைகளும் இந்த செய்தியை பெரிய அளவில் வெளியிட்டிருந்தன.

இந்தியாவில் மட்டுமல்ல பிரான்சிலும் உலகின் மற்ற நாடுகளிலும், பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடுமைகள் நடக்கத் தான் செய்கின்றன. பிரான்சில் ஒரு நாளைக்கு 200 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன.

பிரான்சில் உள்ள பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க மறுக்கின்றனர். இந்தியாவிலும் இதுபோன்ற நிலை காணப்படுகிறது.

இந்தியாவில் பெண்களுக்கு என்னென்ன பிரச்னைகள் உள்ளனவோ அதே பிரச்னைகள் பிரான்சிலும் உள்ளன. இன்னும் கூற வேண்டுமானால் பிரான்சை விட இந்தியாவில் உள்ள பெண்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


.

சூரிய குடும்பத்தை போன்று புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு


சூரிய குடும்பத்தை போன்று 7 கிரகங்கள் அடங்கிய புதிய குடும்பத்தை ஜேர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 7 கிரங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இதில் d, g மற்றும் h போன்ற கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

ஆனால் மீண்டும் ஆராய்ச்சி நடத்தியதில் கிரகங்கள் b, c மற்றும் f கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கோள்களின் இயல்பு தன்மையுடன் விளங்குகின்றன என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் கிரகங்கள் h, g வாயு ராட்சதர்கள் மற்றும் கிரகம் g ஆனது கண்டுபிடிக்கப்பட்டவைகளில் பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது

பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை


குண்டான குழந்தைகளுக்கு ஆயுள் குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் ஓடியாடி விளையாடுவதில்லை.

வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர்.

Friday, 25 October 2013

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!- 7 பெண்கள் கைது


கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கிருந்த 7 பெண்களை கைதுசெய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி டின்ஸ்டன் பிளேஸ் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்த விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அதனை சுற்றிவளைத்த பொலிஸார் அதனை நடத்திய பெண் உட்பட 7 பெண்களை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள், பத்தரமுல்லை, ஹட்டன், காலி, மதவாச்சி, மீகொட, ஜா-எல, நாராஹேன்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

நவிபிள்ளை வம்சம் இலங்கை வந்திருந்தால் அவரும் கொழுந்து கூடை சுமந்திருப்பார்! மனோ கணேசன்


இந்திய வம்சாவளி தமிழ் பூர்வீகத்தை கொண்ட தென்னாபிரிக்க பிரஜையான நவநீதம்பிள்ளை ஒரு இரும்பு பெண். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. ஐநா அதிகாரி. சட்ட அறிஞர். உலகம் முழுக்க வாழும் தமிழ் பெண்களுக்கெல்லாம் அவர் பெரும் உதாரணம்.
இந்திய வம்சாவளி தமிழர்களான நவநீதம்பிள்ளையின் முன்னோர் தென்னிந்தியாவில் இருந்து நல்லவேளையாக தென்னாபிரிக்காவுக்கு போனார்கள். இங்கு கண்டி சீமைக்கு கொண்டுவரப்பட்ட மலையக மக்களை போல் அவர்களும், தப்பி தவறி அன்று இலங்கை வந்திருந்தால் இன்று என்ன நடந்து இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்?

U.S. காட்டுப்பகுதிக்குள் கொலையுண்ட ஆசிரியர். 14-வயது மாணவன் குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.

murderDANVERS, Mass. மசாசுசெட்ஸ் நகர் உயர்தர பாடசாலைக்கு பின்னால் உள்ள மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்குள் ஆசிரியை ஒருவர் தாக்கப் பட்ட இறந்து கிடக்க கண்டுபிடிக்கப் பட்டுள்ளார். 14-வயதுடைய பையன் பெருந்தெருவழியாக நடு இரவில் நடந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டுபிடிக்கப் பட்டதுடன் ஆசிரியரை கொன்ற குற்றமும் இவன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
பாடசாலையின் இரண்டாவது மாடியில் உள்ள பாத்ருமில் இரத்தம் காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் மேற்கொள்ளப் பட்ட விசாரனை மூலம் கொலின் றிற்சர் என்ற 24-வயதுடைய ஆசிரியையின் உடல் கண்டு பிடிக்கப் பட்டது. டென்வர் உயர்தர பாடசாலை கணித ஆசிரியரான இவர் பாடசாலையில் இருந்து செவ்வாய் கிழமை வீடு திரும்பவில்லை என அறிவிக்கப் பட்டதாக மாவட்ட சட்டத்தரணி ஜொனதன் புளொடகெற் தெரிவித்துள்ளார்.

நிஜத்தில் காட்சியளித்த கடற்கன்னி....

2 தாய்கள் சேர்ந்து பெற்றெடுத்த குழந்தை....

ஒரு தாய், இரண்டு குழந்தைகள் பெறுவது இயல்பு. ஆனால், 2 தாய்மார்கள் சேர்ந்து ஒரு குழந்தையை பெறுவது மிக மிக அபூர்வம். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

சாரா மார்ஷல் (வயது 40). என்ற பெண்ணும், மேகி லெய்க் (35) என்ற பெண்ணும் தோழிகள். இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர். அதற்காக, நியூயார்க்கில் உள்ள டாக்டர் ஆலன் காப்பர்மன் என்பவரின் ஆஸ்பத்திரியை அணுகினர்.

மஞ்சள் பாலின் தித்திப்பான நன்மைகள்


உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்று தான் மஞ்சள்.
மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன.

உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.

அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா