Friday, 25 October 2013

U.S. காட்டுப்பகுதிக்குள் கொலையுண்ட ஆசிரியர். 14-வயது மாணவன் குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.

murderDANVERS, Mass. மசாசுசெட்ஸ் நகர் உயர்தர பாடசாலைக்கு பின்னால் உள்ள மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்குள் ஆசிரியை ஒருவர் தாக்கப் பட்ட இறந்து கிடக்க கண்டுபிடிக்கப் பட்டுள்ளார். 14-வயதுடைய பையன் பெருந்தெருவழியாக நடு இரவில் நடந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டுபிடிக்கப் பட்டதுடன் ஆசிரியரை கொன்ற குற்றமும் இவன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
பாடசாலையின் இரண்டாவது மாடியில் உள்ள பாத்ருமில் இரத்தம் காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் மேற்கொள்ளப் பட்ட விசாரனை மூலம் கொலின் றிற்சர் என்ற 24-வயதுடைய ஆசிரியையின் உடல் கண்டு பிடிக்கப் பட்டது. டென்வர் உயர்தர பாடசாலை கணித ஆசிரியரான இவர் பாடசாலையில் இருந்து செவ்வாய் கிழமை வீடு திரும்பவில்லை என அறிவிக்கப் பட்டதாக மாவட்ட சட்டத்தரணி ஜொனதன் புளொடகெற் தெரிவித்துள்ளார்.
குறிப்பிடப் பட்ட ஆசிரியர் மிக மிக மரியாதையானவரும், எல்லோராலும் விரும்பப் பட்டவரும் என கூறப்பட்டுள்ளது.
Philip Chism என்ற சந்தேக நபர்மீது புதன்கிழமை கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு ஜாமின் இன்றி வைத்திருக்கும் படி கட்டளை இடப்பட்டுள்ளது. இவன் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு செல்லவில்லை என்றும் புதன்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு வீதியில் நடந்து கொண்டிருக்கையில் பிடிபட்டதாகவும் தெரியவருகின்றது.
Chism றிற்சரை அடித்து கொன்றுள்ளதாக குற்றவியல் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இவனது குற்றவிசாரனை வயதுவந்தவர்களுக்கான நிதிமன்றத்தில் இடம்பெற்றதாகவும், அவனது வழக்கறிஞர் இவனது வயது கருதி சட்டநடவடிக்கைகள் மூடப்படவேண்டுமென்றும் இவன் மறைவாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நீதிபதி இவ்வேண்டுகோளை மறுத்து விட்டதாக தெரியவருகின்றது.

டென்வேர்ஸ் பகுதியில் உள்ள சகல பாடசாலைகளும் புதன்கிழமை மூடப்பட்டன.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா