சம்பவம் பற்றி
மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலையிலிருந்து
வருகைதந்த சுற்றுலாப் பயணிகள் நால்வர் கார் ஒன்றில் தீவுப்பகுதியில் பல இடங்களைப்
பார்வையிட்ட பின்னர் யாழ் நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.


இதன்போதே, அவர்கள் பயணித்த கார் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து அருகிலிருந்த பாதுகாப்புக் கட்டுக்களை உடைத்துக் கொண்டு கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில்
காரினுள் இருந்த நால்வரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என்று தெரிவித்த
யாழ். பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment