Sunday, 13 October 2013

யாழ் மற்றும் மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து: மூவர் மரணம்


மட்டக்களப்பு ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் வந்தாறுமூலை பேக் ஹவுஸ் வீதியைச் சேர்ந்த கணேசபிள்ளை பாஸ்கரன் (வயது 29) என்பவரே மரணமடைந்துள்ளார்.

விபத்தில் மரணமடைந்த இளைஞர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதுண்டு பின்னர் வீட்டு மதிலில் மோதுண்டு விபத்திற்குள்ளானது.

இதன்போது படுகாயமடைந்த இவர் உடனடியாக அவர் ஏறாவூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் விபுலானந்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 59 வயதான ஜே.பத்மநாதன் என்பவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டு. வந்தாறுமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளது.

இச்சம்பவமானது வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் முன்னால் இன்று இடம்பெற்றுள்ளது.

சித்தாண்டி மாவடிவேம்பு கிராம அபிவிருத்திச் சங்க வீதியில் வசிக்கும் சுப்பிரமணியம் உதயகுமார் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரிதிதென்ன போக்குவரத்து சாலைக்குரிய பஸ்ஸானது, முன்னோக்கிச் சென்ற போது எதிரே வந்தாறுமூலை பகுதியில் இருந்து மாவடிவேம்பிலுள்ள தனது வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த நபர் மீது மோதியதால் குறித்த நபர் ஸ்தலத்திலே உயிரிந்துள்ளார்.

இச்சம்பவ இடத்திற்கு சமூகமளித்த பொதுமக்கள் சாரதியை பிடிக்க முற்பட்டபோது சாரதி தப்பியோடியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சடலம் செங்கலடி வைத்தியாலைக்கு எடுத்துச் செல்லவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, குறித்த பஸ் வண்டியை எறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா