Friday, 11 October 2013

ஆளுநர் சந்திரசிறி- வடமாகாண அமைச்சர்கள் சந்திப்பு


வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வையடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது.


இதன்போது வட மாகாண அமைச்சர்களுக்கான நியமனக் கடிதங்கள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா