நேற்று நண்பகல் அளவில் நபர் ஒருவருக்குத் தொலைபேசி அழைப்பு
ஒன்று வந்துள்ளது.
உடனே குறித்த
நபர் கேட்டவாறே தனது அடையாள அட்டை மற்றும் விபரங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து
மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் கையில்
வெள்ளைத்தாள் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில்
பணம் பெற்றுக் கொள்வற்கு நன்றி தெரிவிப்பதாக எமக்கு கடிதம் ஒன்றை எழுதி உடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வையுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, நாங்கள் கொடுக்கும் இலக்கத்திற்கு உடனடியாக 4200/= ரூபாவை ஈசி கேஷ் மூலம் அனுப்பி வையுங்கள்
எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 15 நிமிடத்தில் அனுப்பி வைத்தால் மாத்திரமே உடனடியாக ரூபா 500,000 பெற்றுக்கொள்ள நாம்
"பின்" இலக்கத்தைத் தெரிவிப்போம். நீங்கள் திங்கட்கிழமை குறித்த வங்கிக்குச் சென்று பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment