Saturday, 12 October 2013

மீண்டும் விஸ்பரூபம் எடுக்கும் பாலசந்திரன் விவகாரம்!: நெருக்கடியில் சிறிலங்கா


மீண்டும் விஸ்பரூபம் எடுக்கும் பாலசந்திரன் விவகாரம்!: நெருக்கடியில் சிறிலங்காமீண்டும் விஸ்பரூபம் எடுக்கும் பாலசந்திரன் விவகாரம்!: நெருக்கடியில் சிறிலங்கா


தேசியத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பிரபாகரனின் இளைய மகனான, 12 வயதான பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவத்தினரே, படுகொலை செய்ததாக உலகளவில் பிரபலமான, தி எக்கனமிஸ்ட் இதழின், தெற்காசிய பிரிவுக்குப் பொறுப்பான அடம் றொபேட்ஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில், நடந்த ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்தும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதுடெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு, ஏஜேகே தொடர்பாடல் ஆய்வு நிலையம், அமைதிக்கும், முரண்பாட்டுத் தீர்வுக்குமான நெல்சன் மண்டேலா நிலையம் என்பன இணைந்து ஊடகவியலாளர்களுக்கான இரண்டுநாள் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தன.

இதில் கருத்து வெளியிட்ட அடம் றொபேட்ஸ்,

“2009 மே மாதம், போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவத்தினரே படுகொலை செய்தனர்.

குற்றவாளிகளான, சிறிலங்காப் படையினர், படுகொலைகளை நிறைவேற்றிய காணொலிக்காட்சிகளை வெளியிடாதிருந்தால், போரின் முடிவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்திருக்காதுஎன்றும் அடம் றொபேட்ஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியை தளமாக கொண்டு செயற்படும், பிரித்தானிய ஊடகவியலாளரான, அடம் றொபேட்ஸ், அண்மையில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், அழைத்துச் சென்ற இந்திய ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, ஈரான், மலேசியா, பங்களாதேஸ், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, பூட்டான், மாலைதீவு, நேபாளம் ஆகிய 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் சிறிலங்காவில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளமையால் சிறிலங்கா அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே, மாநாட்டில் கலந்து கொள்ள சிறிலங்கா செல்லும், பிரித்தானிய பிரதமர், சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா