அண்மையில்
நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு
வெற்றியீட்டிய சிவாஜிலிங்கம், இவ்வாறு பதவிப்
பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
வல்வெட்டித்துறை
மாவட்ட வைத்திய அதிகாரி ஜே.மயிலேறுபெருமாளின் முன்னிலையில், சிவாஜிலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து
கொண்டுள்ளார்.

தனியாக
முள்ளிவாய்க்கலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாக ஒன்பது உறுப்பினர்கள்
உத்தேசித்திருந்தனர்.
எனினும், மன்னார் மாவட்ட ஆயரின் தலையீடு காணரமாக எட்டு
உறுப்பினர்கள் பதவிப் பிரமாண நிகழ்வுகளை முள்ளிவாய்க்காலில் நடத்தவில்லை.
இதனிடையே,
முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவாஜிலிங்கம் சற்று முன்னர் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம்
செய்து கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment