Thursday, 10 October 2013

வறுமையால் குழந்தைகளை விற்ற பெற்றோர்


தமிழ்நாட்டில் ஆண் குழந்தையை 10 ஆயிரம் ரூபாய்க்கும், பெண் குழந்தையை 9 ஆயிரம் ரூபாய்க்கும் பெற்றோர்களே விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் மலர் தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

ஆனால் வறுமை காரணமாக அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவரின் துணையுடன் குழந்தைகளை விற்றுள்ளனர்.


தகவல் அறிந்த குழந்தைகள் நல அதிகாரிகள் குழந்தைகளை மீட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா