Wednesday, 23 April 2014

மண்டைதீவிலிருந்து பெண்ணை யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட 5பேர் கைது

மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண் உட்பட 6 பேரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரபிணையில் செல்லவும், பிரதான சந்தேக நபரை மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் நேற்று (22) உத்தரவிட்டார். a
அத்துடன், மேற்படி நபர்களின் வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் சான்றிதழை கிராம அலுவலரிடம் பெற்று தம்மிடம் சமர்ப்பிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார். மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவையும், குறித்த வாகனத்தின் சாரதியினையும் கடத்தப்பட்ட பெண்ணையும், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார் என வன்னி மீடியா இணையம் மேலும் அறிகிறது.


No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா