Tuesday, 22 April 2014

மீள்குடியேற்றம் பற்றி மூடிமறைத்து தகவல்கள் வெளியிட்ட கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்


கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் கிளி. கூட்டுறவு சபை மண்டபத்தில் இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் .தே.கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், எம்..சுமந்திரன் மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், அலன்டீலன், வடமாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின் தவிசாளர் நாவை.குகராஜா, சபையின் உறுப்பினர்கள் பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என மாவட்ட அபிவிருத்தி வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேற்படி கூட்டத்தில் மீள்குடியேற்றம் கல்வி உள்ளுராட்சி மருத்துவம் போன்ற துறைகள் பற்றிய கருத்துக்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில் நேரம் போதாமை காரணமாக நேர்த்தியான எந்த தீர்மானங்களும் இன்றி கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.
இங்கு மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயப்பட்ட போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மூடிமறைத்து தகவல்களை வழங்கினார். பா.உறுப்பினர் சி.சிறீதரன் இரணைதீவு பரவிப்பாஞ்சான் போன்ற கிராமங்களின் மீள்குடியேற்றம் பற்றி வினாவிய போது இரணைதீவு மக்கள் மீள்குடியேறுவதற்கு தங்களிடம் இதுவரை கோரிக்கை விடவில்லையென அரசாங்க அதிபரால் சொல்லப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா