
'நான் சொன்னதைப்போல ஜெனீவா
முடிந்த பின்னர் இரண்டு ஒரு
பேருக்கு வெடி விழுந்துள்ளது' என
கருணா எனப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கில்
நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து
கொண்டு பேசும்போது, 'தமிழ் கட்சிகள் மக்களை
உசுப்பேத்தி வேடிக்கை பார்த்து திரும்பவும் எங்கேயும் வெடி கொண்டு போகும்
முயற்சிகளில்தான் ஈடுபடுகின்றன என்று தெரிவித்த அவர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பே மீண்டும்
பயங்கரவாதத்தை உருவாக்க முனைகிறது' எனவும் அவர் குற்றம்
சுமத்தியுள்ளார்.
தான் வெளிப்படையாக ஒரு விடயத்தை கூறுவதாக
தெரிவித்த அமைச்சர் கருணா மூன்று மாத்திற்கு
முன்பாகவே ஜெனீவா முடிந்ததும் இரண்டு
ஒரு பேருக்கு யாழ்ப்பாணத்தில் வெடி விழும் என்று
முற்கூட்டியே குறிப்பிட்டிருந்ததையும் நினைவுபடுத்தினார்.
'அங்குள்ள
அரசியல்வாதிகளே அவர்களை இவ்வாறு நடத்தினர்
என்று குற்ப்பிட்ட அமைச்சர் கருணா தமிழ் தேசியக்
கூட்டமைப்பால் மூன்று பெடியன்கள் காட்டில்
ஆயுத்துடன் ஓடி வெடி வைத்து
இப்போ பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது'
என்றும் குறிப்பிட்டார்.
இது தேவையற்ற வேலை என்று தெரிவித்த
கருணர் இதனால் ஆக்கபூர்வமாக ஒன்றும்
நடக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழ்
அரசியல்வாதிகள் தங்களை தக்க வைத்து
மக்களை ஏமாற்றுவதைத் தவிர இதனால் எதுவும்
உருப்படியாக நடைபெறப் போவதில்லை என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்
No comments:
Post a Comment