Tuesday, 22 April 2014

இலங்கைப் பெண்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக வேலை வாய்ப்பாம்.

வீட்டுப் பணிப்பெண் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
25 - 45 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களுக்கே இந்த வேலை வாய்ப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலதிக தகவல் அறிய, 0773 148 927 , 0773 983 536 மற்றும் 0775 489 506 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூன்று வாரகால பயிற்சியின் பின் மொழி தேர்ச்சிப் பயிற்சியில் சித்திபெறும் பெண்களை எவ்வித கட்டணமும் இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு பணிப் பெண்களாக அனுப்பி வைக்க எதிர்பார்த்துள்ளதாக மங்கல ரந்தெனிய தெரிவித்தார்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா